விசுவாசம் ஆப்பிரிக்க பயண அறிக்கை Zion, Illinois, USA 52-0725 1சகோதரன் பாக்ஸ்டர். மாலை வணக்கம், நண்பர்களே. (...?...ஐ கொண்டுவர விரும்புகிறேன்.) மாலை வணக்கம், நண்பர்களே. நம்முடைய கர்த்தரின் ஆராதனையில், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு பிரதிநிதித்துவப் படுத்தும்படி இன்றிரவு இங்கே இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர். கல்வாரியில் அவருடைய மரணமும் உங்களுக்காக அவருடைய பரிகாரமும், உங்களுடைய சரீரத்தின் சுகமளித்தலுக்காகவும், உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்புக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சந்தோஷத்திற்காகவும்.... 2வேதவாக்கியத்தில் அது எழுதப்பட்டுள்ளது என நான் நம்புகிறேன், வேதத்தை எழுதினவர்களில் ஒருவர், “நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்'' என்று கூறினார். மேலும் இப்பொழுது இன்றிரவு, தேவன் இங்கேயுள்ள ஒவ்வொரு வியாதியஸ்தர்களையும் இன்றிரவு சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் அனைவரும் சுகமடைய வேண்டும் என்பது தான் தேவனுடைய சித்தம் என்பதில் நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நீங்கள் சுகமாயிருப்பதையே தேவன் விரும்புகிறார்; நீங்களும் நானும் விசுவாசத்தை மாத்திரம் கொண்டிருக்கக் கூடுமானால். அந்த மகத்தான, விசுவாசப் பொருள் என்பது என்னவென்றும், அது என்னவாக உள்ளது என்று சில நேரங்களில் வியப்படைகிறோம். என்னுடைய ஆச்சரியத்தை நீங்கள் அறிவீர்கள், நான் இருதயத்தில் பெருமதிப்புடன் இதைக்கூறுகிறேன், நான் ஏதோவொன்றை தவறாக கூறிவிடுவேனோ என்று பயப்படுகிறேன். விசுவாசத்திற்குப் பதிலாக நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டு தாங்கள் விசுவாசிப்பதாகக் கூறிக்கொள்ளும் ஏறத்தாழ எண்பது சதவீதம் ஜனங்களை நான் கண்டிருக்கிறேன். விசுவாசமானது அப்படியே மிக நிச்சயமானதாக உள்ளது. அது திடமாக உள்ளது. அது அசைவதேயில்லை. அது அப்படித்தான் என்பதாக உள்ளது. 3விசுவாசம் என்பது ஒரு பொருள். அது ஒரு புலன். அது மனித சரீரத்தின் ஆறாவது புலனாகும்... அதுவும் ஒரு புலன் தான்... மனித ஆத்துமா இரண்டு புலன்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் மனித சரீரத்தைக் கட்டுப்படுத்தும் ஐந்து புலன்களைக் கொண்டிருக்கிறான். பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல். உள்ளான மனிதன் இரண்டு புலன்களைக் கொண்டிருக்கிறான், அதாவது விசுவாசமும் அவிசுவாசமும். அவைகளில் ஒன்று தான் அவனைக் கட்டுப்படுத்துகிறது. நான் நான் இதைக் குறித்து ஆவிக்குரியபிரகாரமாய் வியப்படைந்து கொண்டிருக்கும்படியான ஒரு நிலைக்கு நாம் வருகிறோம்... நாம் உண்மையாகவே... நாம் எல்லைக்கோட்டை மிக அருகில் கொண்டுவராமலிருந்தால்.... நீங்கள் அவ்வாறு எண்ணவில்லையா? எல்லைக்கோட்டு விசுவாசிகள், அங்கே அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கே இருக்கிறார்கள். அவர்கள் ஆழத்திற்குள் படகை இறக்க பயப்படுகிறார்கள். எல்லைக்கோடு. அப்படியே நீங்கள் நடக்கக்கூடிய தூரம்.... 4சமீபத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த போது, நான்..... நான் அங்கே இருந்த சமயத்தில்..... நான் இப்பொழுது உங்களிடம் கூறுவதற்கு நேரமில்லை. ஆனால் கர்த்தர் என்னிடம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யும்படி கூறினார். நாம் நியமித்திருந்த பிரயாணத்தின் நிர்வாகத்தினர் எதிர்த்து நின்று ஒன்று கூடினார்கள், அந்த மனிதர்கள் புரிந்துகொள்ளவில்லை. நான் அதைச் செய்யும்படி அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. நானோ, “சரி. பாருங்கள், நாம் அவதிப்படப்போகிறோம்'' என்றேன். 5தென்னாப்பிரிக்காவிலிருந்து எங்காவது சந்திப்பில் இருக்கும் மிஸ்டர் ஜாக்ஸனுக்கு இது பற்றி எல்லாம் தெரியும். நான் ஒரு மரத்திலிருந்து கிழித்தபோது. மந்திரி சர்வதேசக் குழுவின் முன் எழுந்து நின்று, “இவ்வாறு கர்த்தர் சொல்லுகிறார், நாங்கள் அந்த வழியில் செல்ல மாட்டோம். செய்தால் துன்பம் அடைவோம். அப்படிப் போவது சரியல்ல. நாம் இங்கிருந்து ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து நேராக டர்பனுக்குச் செல்ல வேண்டும். நிச்சயமாக, அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் உள்ளே சென்றேன், பிறகு, அதன் விவரத்தை உங்களுக்குத் தருகிறேன். இது ஒரு கணம், அல்லது இரண்டு, ஒருவேளை, பத்து, பதினைந்து நிமிடங்கள் ஆகாது. நாங்கள் ஜோகன்னஸ்பர்க்கில் வந்திறங்கியபோது, ​​தென்னாப்பிரிக்காவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. என் மனைவி, உட்கார்ந்து, இதைப் பார்த்து சிரிக்க வேண்டியிருக்கும், நான் அவளிடம் சொன்னபோது, ​​​​நான் சொன்னேன், “நீங்கள் எனக்கு எழுதுங்கள், தேனே, ஜோகன்னஸ்பர்க், தெற்கு ரோடீசியா. ஜோகன்னஸ்பர்க்....” அதாவது, மன்னிக்கவும், “டர்பன், தெற்கு ரோடீசியா.” டர்பன் ரோடீசியாவில் இல்லை. கனடாவின் சீயோனுக்கு எழுதுவது போல் இருக்கும். பார்க்கவா? அது வேறொரு தேசம். ரோடீசியா மற்றொரு நாடு. டர்பன் இருக்கும் இடம் தென்னாப்பிரிக்கா, ஆனால் எனக்குத் தெரியாது. கர்த்தர் என்னை டர்பனுக்கு அனுப்பினார், ஏனென்றால் அங்குதான் மிஸ். புளோரன்ஸ் நைட்டிங்கேல் குணமடைந்தார். அவள் திரும்பிச் சென்றாள், நான் செல்வேன் என்று ஆண்டவரிடம் வாக்குறுதி அளித்தேன். மேலும் அங்குதான் போகிறேன் என்று நினைத்தேன். 6நான் ஜோஹன்னஸ்பர்க்கில் இறங்கினபோது, சகோதரன் பாக்ஸ்டரும் மற்றவர்களும் அங்கே எனக்காக காத்துக்கொண்டிருந்தனர். அவர், “இங்கே தான் நாம் கூட்டத்தைக் கொண்டிருக்கிறோம்” என்றார். ஏறக்குறைய இருபதாயிரம் ஜனங்களோ அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் அங்கே வெளியே அந்த இடத்தை, சுற்றிலும் இருக்கின்றனர். என்னே, அப்போது எத்தனை பேர் வெளியே இருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் ஊகிக்கிறேன், பட்டணத்திலிருந்து ஏறக்குறைய இருபது அல்லது முப்பது மைல்கள், அங்கேதான் அவர்கள் எங்களை அழைத்துச்சென்றனர், அங்குதான் கூட்டம் நடக்கவிருந்தது. நான் அங்கே வந்தபோது, முதல் நாளிரவு, நான் மிகவும் களைத்துப்போனேன், நான் மூன்று நாட்களாக ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தேன். நான் களைத்துப்போய், சோர்ந்து போயிருந்திருந்தேன், தூக்கமில்லை. அது எப்படியென்று நீங்கள் அறிவீர்கள், பாய்ந்து செல்லும் விமானங்களாகிய அவைகள், கடலின் மேலும், மற்றவைகளின் மேலும் செல்லுதல். உங்களுக்கு நன்றி, ஐயா. நல்லது, எனவே நான் அங்கே சென்றடைந்த போது, நான் அப்படியே கூட்டத்திற்கு நடந்தேன், அப்படியே அவ்விடத்தை அடைந்தேன், அங்கே ஒவ்வொரு இடத்திலும் ஆயிரம் பத்தாயிரக்கணக்கான ஜனங்கள் அங்கே உள்ளே கூடியிருந்தனர், அங்கே அவர்கள் எனக்காக மூன்று நாட்களாக ஒன்றாகக்கூடி, காத்துக்கொண்டிருந்தனர். 7நான் அங்கே சென்றடைந்தவுடனே, அப்படியே திடீரென்று எனக்கு முன்பாகத் தோன்றின ஒரு தரிசனத்தைப் பார்த்தேன். அங்கே அது வந்தது, ஒரு கால் மற்றொரு காலை விடவும் ஏறக்குறைய ஆறு அங்குலங்கள் குட்டையான காலுடன் கூடிய ஒரு பையனாக அது இருந்தது. அவனுடைய முடமான கால் இயல்புநிலைக்கு (normal) வருவதை நான் கண்டேன். அந்தப்பையன் எங்கிருக்கிறான் என்று காணும்படி நான் சுற்றிலும் நோக்கினேன்; அவன் உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் கண்டேன். நாங்கள் ஜெப அட்டைகளைக் கொடுப்பதற்கு நேரத்தை கொண்டிருக்கவில்லை. நாங்கள் ஜெப வரிசையை அழைக்க முடியவில்லை, என்னே, அந்த மாதிரியான கூட்டத்தில் அது முடியாது. நான், 'வாலிப மனிதனே, இயேசு கிறிஸ்து இப்பொழுதுதான் உன்னை சுகப்படுத்தினார். நீ டர்பனிலிருந்து இங்கே வருகிறாய். அவர் (இயேசு) உன்னை சுகமாக்கிவிட்டார். உங்கள் காலில் எழுந்து நில்லுங்கள்'' என்றேன். அங்கே அவருடைய கால் பரிபூரணமாக இயல்பாக ஆனது. செய்தித்தாளில், தலைப்புச் செய்திகள், அந்தப் பையன்.. பத்திரிகை நிரூபர்கள் சென்று அவனுடைய கால்களை அளந்து பார்த்தார்கள். அந்த மனிதருடைய தந்தையிடமும் தாயிடமும் அதை உறுதிபடுத்தினர். அங்கே அது இருந்தது. 8பிறகு அடுத்தநாள் அங்கே ஒரு சிறு ஸ்திரீ கட்டிலின் மேல் படுத்துக்கொண்டிருந்தாள். நான், “இந்த வழியாக நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு மோட்டார் வண்டியை நான் காண்கிறேன்; அது மோதினது, ஒரு வாலிப ஸ்திரீ தன்னுடைய முதுகு உடைக்கப்பட்டவளானாள். இதோ இங்கே அந்த ஸ்திரீ இருக்கிறாள்; உங்கள் முதுகு மூன்று இடங்களில் உடைக்கப்பட்டுள்ளது” என்றேன். அவள், “அது சரிதான்” என்றாள். நான்.... அவள், “நான் எப்பொழுதாவது அதை பெற்றுக்கொள்வேனா...'' என்றாள். நான், “எனக்குத் தெரியாது'' என்றேன். நான் அப்படியே ஒருகணம் அங்கே நின்று நோக்கினேன்; அவள் தன்னுடைய கரங்களை முன்னும் பின்னும் வீசி அசைத்துக்கொண்டு, தன்னுடைய சினேகிதிகளிடம் பேசிக்கொண்டு செல்வதை நான் கண்டேன். நான், “ எழுந்து நில்லுங்கள்; இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கி விட்டார்” என்றேன். அவளுடைய தாயோ , “இல்லை, இல்லை, இல்லை. அவளால் எழுந்து நிற்க முடியாது. அவள் - அவள் மரித்து விடுவாள்'' என்றாள். ஞாபகம் கொள்ளுங்கள், ஜாக்கிரதையாயிருப்பது நல்லது. ஒரு உடைக்கப்பட்ட முதுகுடன், ஒரு அசைவு, அவ்வளவுதான். ஞாபகம் கொள்ளுங்கள், உங்கள் முதுகு உடைந்திருந்தால் ஒரு-ஒரு-ஒரு மீட்புக்குழுவினர், நெடுஞ்சாலையின் மீது அரசாங்க மீட்புக்குழுவினர் கூட உங்களை அசைக்கக் கூடாது. அது சரியே. நீங்கள் அங்கேயே கிடக்க வேண்டியதுதான், அது மருத்துவரின் வேலையாக உள்ளது. ஆனால் இப்பொழுது அவர்கள்... அந்த ஸ்திரீ தன்னுடைய முதுகு மூன்று இடங்களில் உடைக்கப்பட்டவளாய் மாதக்கணக்காக அசையாமல் அங்கே அப்படியே அதைப்போன்று படுத்துக்கொண்டிருந்தாள். நான், “இயேசு உங்களை சுகப்படுத்தியிருக்கிறார்” என்றேன். அவள் தன்னுடைய கால்களை ஊன்றி நின்று, மேலும் கீழும் குதித்து உரத்த சத்தமிட்டு தேவனைத் துதிக்கத் தொடங்கினாள். அவளுடைய தாய் மயக்கமடைந்து தன்னுடைய மகள் படுத்திருந்த அதே படுக்கையின் மீது விழுந்தாள். எனவே அது அதைத் தொடங்கியது. பாருங்கள்? 9மேலும் பிறகு, அவர்கள் நிச்சயமாகவே ஒரு மருத்துவ விவகாரத்தை கொண்டிருந்தனர், அந்த மருத்துவ சங்கம் அவர்களுடன் ஒரு மிகவும் குறிப்பிடத்தக்க நேரத்தைக் கொண்டிருந்தனர். நல்லது, அது என்னவாக இருந்தது என்பதையும் நான் உண்மையென்று எண்ணினதையும், அதைக் குறித்த என்னுடைய கணிப்பை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். எனவே அனேக தடவைகள்...?... எனக்குப் பின்னாக கதவை அடைத்து விட்டனர், ஆனால் தேவனுடைய வார்த்தை உண்மையாய் இருப்பதிலிருந்து அதை தடை செய்ய முடியாது. 10எனவே நான் அப்படியே விட்டுவிட்டேன், அடுத்த நாள் அதிகாலையில் மருத்துவ சங்கம் தங்களுடன் நான் காலை உணவைக் கொண்டிருப்பதற்கு அவர்கள் விரும்பினதாக அழைத்தனர். மேலும் அவர்கள் என்னிடம் ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்து, “அது உண்மையான தெய்வீக சுகமளித்தல்” என்று கூறினர். “ மேலும் நீங்கள் இங்கிருக்கும் சமயத்தில் நீங்கள் விரும்பின எதற்கும் நாங்கள் எங்களுடைய மருத்துவமனைகளைத் திறந்து வைத்திருக்கிறோம்” என்ற னர். நான், “உங்களுக்கு நன்றி, ஐயா” என்றேன். “இங்கே ஐம்பது வருடங்களில் எங்களுக்காக ஏற்கனவே அனுப்பப்பட்ட மிஷனரிகளில் பாதிபேர் செய்திருப்பதை விட அதிகமான காரியங்களை நீர் செய்து விட்டீர்” என்றனர். நான், “உங்களுக்கு நன்றி, ஐயா. நான் செய்யும்படி கர்த்தர் அனுமதிக்கிற எல்லாவற்றையும் நான் செய்ய முயற்சிப்பேன்” என்றேன். “சகோதரன் பிரான்ஹாமே, அதைப் போன்று, அந்த வழியிலான தெய்வீக சுகமளித்தலில் நாங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறோம்; அது உண்மை ” என்றனர். நானோ, “உங்களுக்கு நன்றி, ஐயா” என்றேன். எனவே பிறகு அடுத்த நாள், டச்சு சீர்திருத்த பத்திரிகை... ஓ, என்னே. டச்சு சீர்திருத்த சபை, இப்பொழுது இங்கேயிருக்கும் டச்சு சீர்திருத்த ஜனங்களாகிய உங்களுக்கு விரோதமாக எதுவுமில்லை. ஆனால் அங்கேயுள்ள அரசாங்க சபை அதுதான், அவர்கள் உண்மையிலேயே தெய்வீக சுகமளித்தலுக்கு படுமோசமாக எதிர்ப்பாயிருந்தனர். எனவே.... ஆனால் இங்கே அவர்களுடைய செய்தித்தாளோ அதைக்குறித்த கட்டுரைகளை கொண்டு வந்திருந்தது, ஒவ்வொன்றும்; முன்பக்கம், மேலும் அதன் ஒன்று, இரண்டு பக்கங்கள். அடுத்தநாள் ஒரு டச்சு சீர்திருத்த ஊழியக்காரர், என்னை ஆதரிக்கிறவர் வந்தார். நான் ஒரு ஆவியுலக தொடர்புடையவர் என்றும் ஒரு கிறிஸ்தவனைப் போன்று ஏமாற்றுகிற ஒரு சாத்தான் என்றும், ஒரு கிறிஸ்தவனைப் போன்று பாவனை செய்பவன் என்றும், சாத்தானுடைய ஆவியினால் கிரியை செய்பவன் என்றும் அதன் மூலமாகத்தான் நான் காரியங்களை அறிந்து கொள்கிறேன் என்றும் மற்றொருவர் கூறினார். நல்லது, அது ஒருவகையாக அவருடைய சினேகிதரின் கோபத்தை கிண்டி விட்டது. எனவே அவர் அவரைப் பார்ப்பதற்காக சென்றார். அவர், “நீங்கள் தவறாக இருக்கிறீர்கள்'' என்றார். ”இதுதான் தேவன் நம்மை சந்திக்கிற நாளாக இருக்கிறது'' என்றார். எனக்கு விரோதமாயிருந்த மற்ற மனிதர் சொன்னார், “அந்த மனிதன் சாத்தானுடையவராக இருக்கிறார்” என்றார். பாருங்கள்? மேலும் அவர்... 11இந்த மற்றவர், “நான் உங்களுடைய இழக்கப்பட்ட ஆத்துமாவுக்காக ஜெபிக்கப்போகிறேன்” என்றார். எனவே அவர் அப்படியே திரும்பி தோட்டத்திற்குள் நடந்தார். அங்கே ஒரு சிறிய பீச் மரம் இருந்தது. அவர் அந்த பீச் மரத்தினடியில் முழங்கால்படியிட்டு, “ஓ தேவனே, அந்த மனிதர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அது சாத்தியமென்று நான் விசுவாசிக்கிறேன். உம்மாலேயல்லாமல் வேறு யாராலும் இதைச் செய்ய முடியாது என்பதை நான் அறிவேன். நான் அதை விசுவாசிக்கிறேன், அங்கேயுள்ள என் நண்பர் தான் இழக்கப்படப்போகிறார்” என்றார். “இது எங்கள் சந்திப்பின் நாள். அவர் மேல் இரக்கமாயிரும்” என்றார். அந்த முட்செடியில் அசைந்து கொண்டிருந்த, அந்த அக்கினிஸ்தம்பத்தைக் குறித்து அவர் எப்பொழுதாவது கேள்விபடுவதற்கு முன்னமே, ஏறக்குறைய அந்த நேரத்தில் அந்த அக்கினிஸ்தம்பம் அங்கே வந்ததாக கூறினார். அக்கினிஸ்தம்பம் வெளிப்பட்டு தேவனுடைய தூதன் அங்கே நின்றுகொண்டிருந்ததாகவும் உள்ளே நடந்து வந்து தம்முடைய கரத்தை அவருடைய தோளின் மீது வைத்து, “திரும்பி சென்று, அவரிடம் கூறு'' என்று கூறியதாகவும், அவர் சொன்னார். 12அவர் உண்மையாகவே குதித்தபடியே, முழுவதும் உணர்ச்சிவசப்பட்டவராக வாசலினூடாக ஓடினார். அவர், “கர்த்தருடைய தூதன் சரியாக அங்கே என்னை சந்தித்தார். உங்களிடம் வந்து கூறும்படி சொன்னார் ” என்றார். அவர் ஒவ்வொருவரிடமும் அதைக்குறித்து கூறத் தொடங்கினார். “அவர் என்னுடைய தோளின் மீது தம்முடைய கரத்தை வைத்தார்” என்று கூறினார், “அது அப்படியே ஏறக்குறைய என்னூடாக அக்கினி ஆழமாக பாய்ந்தது போன்றிருந்தது'' என்றார். ”நான்-நான்-நான்- நான் உங்களிடம் கூறுகிறேன்!“ என்று கூறிவிட்டு அப்படியே இதைப்போன்று போய்க்கொண்டேயிருந்தார். இந்த டச்சு சீர்திருத்த ஊழியக்காரர் சுற்றிலும் நோக்கிப்பார்க்க நேர்ந்தது, அங்கே சுடப்பட்டதால் உண்டான ஒரு வடு இருந்தது, அவருடைய வெள்ளை சட்டையின் மேல், ஒரு மனிதனின் கையளவு அங்கே சரியாக பதிந்திருந்தது. நான் அந்தச் சட்டையை வாங்கிக்கொண்டேன். 13அடுத்த நாள் செய்தித்தாளின் தலைப்புச் செய்தியாக அது இருந்தது. அந்த மனிதனின் பின்புறத்தை நோக்கிப்பார்த்த இந்த டச்சு சீர்திருத்த ஊழியக்காரரின் கண்கள் இதைப்போன்று வீங்கி விட்டது. அவர்கள் என்னுடைய கரத்தை எடுத்து அந்த மனிதனின் பின்புறத்தின் மீது வைத்தனர், அப்படியே அந்த விரல்கள் மிகச்சரியாகப் பொருந்தினது, அது மிகச்சரியாக சுற்றிலும் சென்றது. அங்கே பயன்படுத்தப்பட்டது ஒரு இடது கையினுடையதாகும். பாருங்கள்? நல்லது, பிறகு எல்லா அனுகூலமும் எங்களுக்குக் கிட்டியது. பிறகு என்னுடைய அன்பான சகோதரன் திரு.பாக்ஸ்டர் அவர்கள் என்னிடம் வந்து, “சகோதரன் பிரான்ஹாம், நாம் ஒரு பயணத்திட்டத்தைக் (itinerary) கொண்டிருக்கிறோம்...... அது சரியாக பிளூம்பாண்டின் வரை சென்று, அங்கிருந்து திரும்பி, பிறகு டர்பனுக்கு செல்ல வேண்டும்” என்று கூறினார். “அதனால் பரவாயில்லை; நாம் இங்கே அனேக காலங்களாக இருக்கிறோம். அது காரியமில்லை . சரி” என்றேன். 14அந்த இரவில் நாங்கள் உள்ளே சென்ற போது, அதிகாலை சுமார் இரண்டு மணியளவில், கர்த்தருடைய தூதன் என்னிடம் வந்து, “நாளை நீ அந்தப்பட்டணத்தில் இருக்கப்போகிறாய், மேலும் ஒரு உள்ளூர்வாசி ஊதா நிறத்தில் வினோதமாக உடை உடுத்தினவளாய் ஒரு இடத்தின் பக்கமாக நின்றுகொண்டிருப்பதை நீ காணப்போகிறாய். நாளை காலையில் நீ மேசையில் உட்கார்ந்திருக்கும் போது திரு. ஷூமெனின் கவனத்தை கவர்ந்து, நீ எழும்பும்போது ஏதோவொன்று சம்பவிக்கப்போகிறது என்று கூறு'' என்றார். மேலும் ”உன்னுடைய மேலாளராகிய திரு.பாக்ஸ்டர் பார்ப்பதற்கு வினோதமாக தோன்றக்கூடிய ஒரு பறவையை உனக்கு சுட்டிக்காட்டப் போகிறார் என்று நீ அவரிடம் கூறு...'' என்றார். (பாருங்கள்?) மேலும் “அவர்கள் உன்னை , புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கேயுள்ள ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயற்சிக்கப் போகிறார்கள் அவர் தன்னுடைய இடுப்பின் மீது புற்றுநோயுள்ளதாக எண்ணுகிறார், ஆனால் அது புற்றுநோயல்ல. மருத்துவர்கள் அப்படியே ஒரு தவறைச் செய்துவிட்டனர், அவர்கள் ஏதோவொன்றை வெட்டி அங்கேயே விட்டுவிட்டனர், மேலும் அந்த மனிதன் மரிக்கப் போகிறார்” என்றார். '... செய்ய வேண்டாம்“ என்றார். அவர், ”இப்பொழுது வேண்டாம்... நீ சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, ஜெபமாலை உருமணிகளை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு உள்ளூர்வாசியை நீ காண்பாய், அவர்களில் அனேகர் சாலையினூடாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள், ஆனால் நாளை அங்கே ஒருத்தி மாத்திரம் இருப்பாள். நீங்கள் அனைவரும் திரும்பி அந்த ஜெபமாலை உருமணிகளை விற்றுக்கொண்டிருக்கிறவளிடம் வருவீர்கள்...'' என்றார். பிறகு அவர் போகையில் மேலும் சொன்னார், “நீர் அவளை அறிந்து கொள்வீர், அவள் ஏறக்குறைய பதினான்கு வயதான ஒரு வாலிப பெண், அவள் இதைப்போன்று அவளுடைய தலையின் மேல்பகுதிக்குப்பின்னால், ஒரு பெரிய காயப்பட்ட பகுதியை கொண்டிருப்பாள்'' என்றார். 15“நீ அந்த மனிதர்களுடன் அங்கே போக கூடாது என்பதை இதன் மூலம் நீ அறிந்து கொள்வாய். நீ இங்கே சரியாக இரண்டு வாரங்கள் தங்கியிருந்து, திரு. ஜாக்ஸனின் பண்ணைக்குச் சென்று, அங்கே வேட்டையாடப் போகிறபடியால் அங்கிருந்து, பிறகு டர்பனுக்குச் சென்று, நான் உன்னை அழைக்கும் வரை டர்பனிலேயே தங்கியிரு” என்றார். அடுத்த நாள் காலை, நான் எழுந்து, அவை எல்லாவற்றையும் திரு. பாக்ஸ்டர் அவர்களிடம் மீண்டும் கூறினேன். அவர் இப்பொழுது சரியாக இங்கே இருந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார், திரு. ஜாக்ஸனும் அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அல்லது நான் நம்புகிறேன்.... சகோதரன் ஜாக்ஸன், நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் இருந்தால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள், எனவே நான் அறிந்துகொள்வேன். இங்கே வலப்பக்கத்தில் இருக்கிறார் என்பதை நான் நிச்சயமாக அறிகிறேன். சரி. அது சரியே. தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள சகோதரன் ஜாக்ஸன் அவர்கள், அங்கு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது சரியாக அங்கே இருந்தார். 16அடுத்த நாள், மேசையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். கர்த்தர் என்னிடம் பேசினார் சிறு.... அவருடைய சிறு பெண்ணைக் குறித்து என்னிடம் கூறினார். அவளுடைய தொண்டையின் சதைப்பகுதியிலுள்ள கோளாறு என்னவென்றும், என்ன சம்பவித்தது என்பதையும் மேலும் மற்றவைகளைக் குறித்தும் கர்த்தர் என்னிடம் கூறினார். திரு. ஷமன் அவர்கள் அதை முதலில் மிகவும் நன்றாக புரிந்து கொள்ளவில்லை. அவர் அப்படியே உணவு உண்ண பயன்படுத்தின முள் கரண்டியை கீழே போட்டுவிட்டார். அங்கிருந்த அவர்களுடைய சொந்த குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் அது தெரியாது என்பதை அவர் அறிந்திருந்தார். பரிசுத்த ஆவியானவர் அங்கே அவருடைய குடும்பத்தைக் குறித்தும், அவர்கள் என்ன செய்திருந்தனர் என்பதைக் குறித்தும் மற்றும் அதைப்போன்ற எல்லாவற்றைக்குறித்தும் முழுவதுமாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். சகோதரன் பாக்ஸ்டர் அங்கே மேசையில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். நான், “இப்பொழுது, நாம் இந்த கூட்ட ஏற்பாட்டை எடுத்துக்கொள்ள கூடாது. கர்த்தர் என்னிடம் இங்கே இரண்டு வாரங்கள் தங்கியிருந்து, அதன்பிறகு திரு. ஜாக்ஸன் அவர்களின் பண்ணைக்குச் சென்று, மீதமுள்ள சுமார் எட்டு அல்லது பத்து நாட்கள் ஒரு ஓய்வுக்காக அவருடன் சென்று வேட்டையாடும்படியும், அதன்பிறகு டர்பனுக்கு சென்று அவர் என்னை அழைக்கும் வரை அங்கேயே தங்கியிருக்கும்படியும் கூறினார் (அது ஏறக்குறைய ஒரு மாதம் இருக்கும் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன்” என்று கூறினேன். அங்கே பிரிக்கப்படாமலிருந்த ஒரே இடம் டர்பன் மாத்திரமே என்றும் மற்ற அனைத்தும் பிரிக்கப்பட்டு விட்டன என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. தெற்குப் பகுதியில் பிரச்சனை உள்ளது என்பதைக் குறித்து நினைக்கிறீர்கள்; நீங்கள் அங்கே அவர்களின் பிரச்சனைகளைப் பார்த்திருக்க வேண்டும். 17இப்பொழுது, நல்லது, நான்..... எனவே நான் அவர்களிடம் கூறினேன். அடுத்த நாள், தற்போது இங்கேயுள்ள சகோதரன் பாக்ஸ்டரும் சகோதரன் பாஸ்வர்த்தும், அவர்கள் அனைவரும். அவர்கள்.... சகோதரன் பாக்ஸ்டர் என்னிடம் சொன்னார், “சகோதரன் பிரான்ஹாம், எனக்கு அதெல்லாம் சரிதான். நீங்கள் தேசிய நிர்வாக குழுவை பார்க்க வேண்டும்'' என்றார். எனவே நான் சகோதரன். ஷூமனிடம் கூறினேன், எனவே அவர்கள் அறிந்திருந்தனர். நான், “சகோதரன். ஷூமேன், இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளபடி, நாம் இன்று அந்தப் பட்டணத்திற்குப் போகப்போகிறோம், அங்கே ஊதா நிறத்தில் உடுத்தியுள்ள ஒரு உள்ளூர்வாசி ஸ்திரீ இருப்பாள் ” என்றேன். “ஒரு-ஒரு என்ன ?” நான், “ஊதா நிறத்தில் உடுத்தியுள்ள ஒரு உள்ளூர்வாசி” என்றேன். அவர், “அப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டதேயில்லை” என்றார். “சரி நீங்கள் இன்று அதைக் காண்பீர்கள்.'' மேலும் நான், ”அவள் ஒரு பூங்காவின் அருகில் நின்றுகொண்டிருந்தாள்'' என்றேன். நான் என்னுடைய வாழ்நாளில் ஜோஹன்னஸ்பர்க்கில் இருந்ததில்லை. நான் சொன்னேன், “அவள் ஒரு பூங்காவின் அருகில் இதைப்போன்று நின்றுகொண்டிருக்கிறாள், அங்கே இந்த வழியில் மூலையில் ஒரு குறுக்குப்பாதை உண்டு, ரோடானது அந்தப் பாதையினூடாக செல்கிறது, அனேக நீண்ட இருக்கைகள் (benches) இதைப்போன்று நெடுகிலும் இருக்கின்றன. ஜனங்கள் அதற்கு மேலாக இருந்துகொண்டு தெருவில் பூக்களை வைத்து, அவைகளை விற்றுக்கொண்டிருக்கின்றனர்” என்றேன். அவர், “அந்த பூங்கா எங்கே உள்ளதென்று எனக்குத் தெரியும்” என்றார். நானோ, “நல்லது, நாம் இன்று அதன் அருகில் கடந்து செல்லப்போகிறோம்'' என்றேன். நல்லது, நாம்.... சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர், “நீங்கள் அங்கே போக விரும்புகிறீர்களா?” என்றார். ஓ, நல்லது, வீட்டிற்குச் சென்று காரியங்களில் மூழ்கி விட்டோம். “நீங்கள் ஊருக்குள் செல்ல விரும்புகிறீர்களா?” என்றார். நான், “ஆம்” என்றேன். நான் அவருடைய அலுவலகத்திற்கு அவருடன் சென்றேன். மேலும் நாங்கள் அவருடைய அலுவலகத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம், நான், “சகோதரன் ஷூமேன், நீங்கள் அந்த பூங்காவின் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிற உங்களுடைய உள்ளூர் பெண்ணைப் பாருங்கள்'' என்றேன். “நல்லது, அதைக்குறித்து உங்களுக்கு என்ன தெரியும்” என்றார். 18எனவே, பிறகு, நாங்கள் அங்கே சென்றடைந்த பிறகு..... அந்த டூப்ளஸிஸின் பெயர் என்ன, டேவிட் இல்லை அல்லவா? (ஒரு மனிதர், “ஜஸ்டஸ்'' என்கிறார் - அசிரியர்.) ஜஸ்டஸ். என்னுடைய கருத்தின்படி, ஜஸ்டஸ் டூப்ளஸிஸ் தென் அப்ரிக்காவிலுள்ள புத்திசாலியான மனிதர்களில் ஒருவராகவும், ஒரு உண்மையான கிறிஸ்தவ பண்பாளராகவும் இருந்தார். அவர் சர்வதேச - தேசிய நிர்வாகக் குழுவின், கூட்டத்திற்கான செலவுகளைப் பொறுப்பெடுத்துள்ளவர்களில் ஒருவராக இருந்தார். அவர் என்னை அழைத்துக்கொண்டு சென்றார், நாங்கள் ஒரு குழுவாக பிரிட்டோரியா (Pretoria) வரை சாலையிலே சென்றோம், சகோதரன் பாக்ஸ்டரும் உடனிருந்தார். அவர்கள் உண்மையாகவே பேசிக்கொண்டு; இதைப் போன்று சாலையில் மணிக்கு ஏறக்குறைய அறுபது மைல் வேகத்தில் வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றனர். அவர், ”நல்லது, இங்கே ஏதோ ஓரிடத்தல் நெடுகிலும் சில வியாபாரிகள் இருக்க வேண்டியதாயிருக்கிறது'' என்றார். நான் சகோதரன் பாக்ஸ்டரை தட்டினேன். 19எனவே நாங்கள் சென்று, கொஞ்சம் மாட்டிறைச்சியையும், சில அரிய பொருட்களையும் மற்றவைகளையும் வாங்கலாம் என்று கூறினோம். நாங்கள் சென்று அப்படியே பக்கமாக கடந்து சென்றோம். நான் சாலையோரத்தில் அந்த சிறிய ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன், தன்னுடைய தலையின் மீது காயப்பட்ட தோலுடன் கூடிய சிறிய கறுப்பின ஸ்திரீ . நான், “அது தான் அந்த சிறு பெண். அவர்கள் இப்பொழுது அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று நான் பார்ப்பேன்” என்று எண்ணினேன். அவர்கள் சாலையின் வழியே சென்று நோக்கிப்பார்க்க நேர்ந்தது, அது அப்படியே ஏறக்குறைய பாதி சதுக்கம் அப்பால். “அங்கே ஒரு வியாபாரி இருக்கிறாள் என்று கூறுகிறேன்” என்றார். அவர் திடீரென பிரேக் போட்டு திரும்பி வந்தார். நான் சகோதரன் பாக்ஸ்டரை நோக்கிப்பார்த்தேன். அவர் பார்க்கவில்லை. அவர் அந்த நேரத்தில் அதைக் குறித்து நினைக்காதது போல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். பின்னால் சுற்றி திரும்பினேன். நாங்கள் அங்கே அடைந்த போது, நான், “சகோதரன் பாக்ஸ்டர், உங்களுக்கு இது ஞாபகம் இல்லையா?” என்றேன். “ஆம், அங்கே அது உள்ளது. அங்கே அந்த சிறிய... அந்த இருபத்தொன்பது மைல் தூரத்தில் சாலையில் உள்ள ஒன்றே ஒன்று” என்றார். 20சகோதரனே, அவைகளை விற்பனை செய்ய அவர்கள் அங்கே ஒவ்வொரு இடத்திலும் சாலையின் மீது உட்கார்ந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியே அவர் என்னிடம் கூறினதைப் போன்று சாலையின் மீதிருந்த ஒரே ஒருவள். நான் அங்கே போன ஏறக்குறைய இருபத்து நான்கு மணி நேரத்தில் .... அதற்கு முன்பு நான் அந்த தேசத்திலேயே இருந்ததில்லை . எனவே அவர், “இப்பொழுது...'' என்றார். அவள் அங்கே அதனுடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள். மேலும் நாங்கள் பின்னால் சென்றோம், சகோதரன் பாக்ஸ்டர் தன்னுடைய காமிராவை எடுத்து அந்த உள்ளூர் பெண்ணை ஒரு படமெடுத்தார். நாங்கள் ஓட்டிக் கொண்டே சென்றோம். சொல்லப்பட்டதைப் போன்று அப்படியே மிகச்சரியாக, அந்த இடுப்புடன் கூடிய மருத்துவர் அங்கே இருந்தார்....... அந்த இடுப்பு அதைக் குறித்து, போதுமான அளவு நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளும் வரை சென்று கொண்டிருந்தோம். பிறகு, அடுத்த நாளில், நாங்கள் - நாங்கள் வெளியே சகோதரன் பாக்ஸ்டர் இருந்த ஒரு - ஒரு இடத்தில் இருந்தோம், அவர் காண்பார் என்று அவர் (கர்த்தர் - தமிழாக்கியோன்) கூறிய விசித்திரமான பறவை அங்கே இருந்தது, அது அப்படியே அங்கே அதே விதமாகவே இருந்தது. பிறகு அவர் வந்து, “நாம் அங்கே செல்லப்போகிறோம்” என்றார். 21“ நல்லது'', சகோதரன் பாக்ஸ்டர் சொன்னார், ”இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாம், இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால், நான் சட்டப்படியான அதிகாரத்தைக் கொண்டிருந்து, “வேண்டாம்!” என்று நான் சொல்லியிருப்பேன். ஆனால், நாம் இங்கே இந்த ஜனங்களின் தயவில் இருக்கிறோம். அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். இப்பொழுது, நான் நூறு சதவீதம் உங்களுடன் இருக்கிறேன்'' என்றார். ஆனால், “இப்பொழுது, இந்த மனிதர்களுக்கு அதை புரிந்துகொள்ள செய்வது, சற்றே வித்தியாசமாக இருக்கும்” என்றார். நானோ , “ நல்லது, அவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்களோ இல்லையோ, கர்த்தர் என்னிடம் என்ன செய்யும்படி கூறினார் என்பதை நான் அறிவேன். அவர் செய்ய சொன்னதையே நான் செய்வேன்” என்றேன். எனவே அடுத்த நாள் காலையில், இங்கே அந்த கார்கள் வந்தன, ஏறக்குறைய நாலாயிரம், ஐந்தாயிரம் அல்லது அதைப்போன்ற ஏதோவொன்று - அந்த வரிசையில் உள்ள கிளர்க்ஸ்டார்ப் என்ற ஒரு சிறிய இடத்திற்குப் போக வேண்டியதாயிருந்தது. ஏறக்குறைய மூன்றரை லட்சம் பேர் அல்லது நான்கு இலட்சம் பேர் இருந்த ஜோகன்னஸ்பர்க்கை விட்டு, அப்படியே நூறு மைல்கள் தூரத்திற்கு . சென்றோம்..... ஆனால் நான் எப்போதும் சொல்லியிருந்தபடி “நீங்கள் குழப்பம் உண்டாக்க விரும்பினால், அப்படியே போதகர்களுடன் முட்டாள் தனமாக நடவுங்கள்'' என்றேன். அங்கேதான் நீங்கள் சிக்கிக் கொள்ளுகிறீர்கள். அவர்களெல்லாரும் அல்ல..... ஆனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் அது போன்ற ஒரு கூட்ட மனிதர்களை பெற்றுக்கொள்வதைக் குறித்து தான். ”அவர்கள் சகோதரர் இன்னார் இன்னார் அவருடைய இடத்தில் இருப்பார் என்று அவர்களிடம் வாக்கு கொடுத்துவிட்டனர், சகோதரன் இன்னார் இன்னார் அங்கு வரவேண்டியதாயிருந்தது.'' இப்பொழுது, அது பரவாயில்லை. ஆனால், சகோதரனே, தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படும் நிலைக்கு அது வரும்போது, நீங்கள் தேவனை பின்பற்ற வேண்டும். பாருங்கள், பாருங்கள்? 22எனவே அவர்கள், “ஓ, நாம் - நாம் கட்டாயம் போய் தான் ஆகவேண்டும். அவ்வளவு தான்'' என்றனர். எனவே அவர்கள் கார்களில் ஏறினர். நான் இன்னும் அங்கே உள்ளேயே உட்கார்ந்துகொண்டிருந்தேன், நான் போக முடியாது. நான் போகவில்லை. இல்லை , ஐயா. எனவே அவர்கள், “நீங்கள் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் கட்டாயம் போய்தானாக வேண்டும்'' என்றனர். எனவே நான், “ நல்லது, சரி” என்றேன். நான் வெளியே சென்று, சாலையில் செல்லத் தொடங்கினேன். அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “நீ அதைச் செய்யாமலிருப்பது நல்லது'' என்று கடிந்துகொண்டே வந்தார். நான், “தேவனே, நான் இதைப்போன்று உம்முடைய கோட்டை கடந்து சென்று கொண்டிருந்தால்; ஆனால் நான் இங்கே இந்த சூழ்நிலையில் இருக்கும் போது, நான் என்ன செய்யப் போகிறேன்? நான் இந்த மனிதர்களின் தயவில்தான் இருக்கிறேன்” என்றேன். அது தொடர்ந்து மோசமாகிக்கொண்டே இருந்தது . 23நான், “காரை நிறுத்துங்கள்!” என்றேன். காரை நிறுத்தினார்கள். வித்தியாசமான கார்களில் வந்துகொண்டிருந்த அந்த மனிதர்களும், என் மகனாகிய பில்லிபாலும், திரு. ஸ்டாட்ஸ்க்லெவ் அவர்களும் அங்கு வந்தனர். ஓ, திரு. பாஸ்வர்த்தும் அந்தக் குழுவிலுள்ள ஒரு கூட்ட மனிதர்களும் அவர்கள் அனைவரும் வந்தனர். நான் திரு. ஷமேன் அவர்களுடன் இருந்தேன். அங்கே அது இருந்தது. சகோதரன் பாக்ஸ்டர் மற்றொரு காரில் இருந்தார். எனவே அவர்கள் அவரிடம் சென்று, “அவர் போக மறுக்கிறார், எனவே நீங்கள் அவரிடம் சென்று பேச வேண்டும்” என்றனர். ''நான் இங்கிருந்து தொடர்ந்து முன்னேறிச்செல்ல மாட்டேன். அது அப்படியே... திரும்பிப் போக வேண்டுமென்று கர்த்தர் என்னிடம் சொன்னார். எனவே நான் இதை செய்ய முடியாது'' என்று நான் கூறினேன். அவர்கள், “நல்லது, சகோதரன் பிரான்ஹாம், இங்கே பாருங்கள்...'' என்று கூறினர். அவர்கள் அதைக்குறித்து சிறிது கடுப்பாகிவிட்டனர். நான்...... அந்தக் குழுவிலுள்ள மனிதர்களில் ஒருவர், ”தேவன் உங்களைத் தவிர வேறுயாரிடமாவது கூட பேசுகிறார் என்பதை நீங்கள் எண்ணவில்லையா?“ என்றார். 24நான், “ஒரு நாளில் கோராகும் அப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருந்து, மோசேயிடம் அதைக் கூறினான். ஆனால் பூமி பிளந்து, அவனை விழுங்கிப் போட்டது. அவர் உங்களிடம் என்ன கூறினார் என்பது எனக்குத் தெரியாது; நான் அதைக்குறித்து தீர்ப்பு கூற முடியாது; அவர் என்னிடம் என்ன சொன்னார் என்பதுதான் எனக்குத் தெரியும்” என்றேன். நல்லது, அவர், “இந்த பயண திட்டத்தை செய்வதற்கு எங்களிடம் சொன்னது அவர் தான்'' என்றார். நானோ, “அந்த பயணத் திட்டத்தை மேற்கொள்ள கூடாதென்று அவர் என்னிடம் சொன்னார்” என்றேன். நல்லது, இப்பொழுது நீங்கள்..... “ இந்தப் பயண திட்டத்தை மேற்கொள்ளும்படி அவர் உங்களிடம் சொல்லியிருந்தால், தொடர்ந்து முன்னே போகலாம். ஆனால் அதைச் செய்யக் கூடாதென்று அவர் என்னிடம் சொன்னார் ” என்றேன். நல்லது, விவாதமானது மோசமாகி மோசமாகிக் கொண்டே சென்றது. கடைசியாக, சகோதரன் பாக்ஸ்டர் வந்தார். சகோதரன் பாக்ஸ்டர், என்னிடம், “சகோதரன் பிரான்ஹாம், நாம் இங்கே ஒரு சிக்கலான இடத்தில் இருக்கிறோம். அந்த வேட்டை பயணத்திற்கு நீங்கள் போக வேண்டுமென்று சொல்லக்கூடாது என்று நான் விரும்புகிறேன்'' என்றார். 25ஆனால்..... இப்பொழுது, சகோதரன் பாக்ஸ்டர் ஞானமுள்ள ஒரு மனிதர். அது இருக்கக்கூடும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான வகையில் ஒரு காரியத்தின் சாராம்சத்தை நோக்குபவர். அவர், “பாருங்கள், நீங்கள் இன்னும், வேட்டைக்குப் போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால், நீர் வேட்டையாடுவதற்குத்தான் இங்கே வந்திருக்கிறீர் என்று அவர்கள் நினைத்துக் கொள்வர், இங்கேயிருக்கும் அவர்களில் பாதிபேருக்கு வேட்டைக்குச் செல்வதில் நம்பிக்கையே கிடையாது. அதோ அங்கே ஆயிரக்கணக்கான ஜனங்கள் வியாதிப்பட்டு, மரிக்கும் தருவாயில் இருக்கும்போது, நீர் வேட்டைக்குப் போவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறீரே'' என்றார். நான் அவரிடம், “சகோதரன் பாக்ஸ்டர், நான் வேறொரு துப்பாக்கியை என்னுடைய ஜீவியத்தில் வெடிக்கச் செய்யாமல் இருந்தால், நான் என்னுடைய ஜீவியத்தில் மீண்டும் ஒரு - ஒரு களத்தில் நடவாமல் இருந்தால் (நலமாயிருக்கும்), தேவன் என்ன சொன்னாரோ நான் அதை மாத்திரம் செய்கிறேன்” என்றேன். பாருங்கள்? “நான் தேவன் என்னிடம் கூறின கட்டளைகளை அப்படியே பின்பற்றுகிறேன், அதிலுள்ள நல்லது கெட்டது இன்னதென்று நான் பார்ப்பதில்லை” என்றேன். மேலும் நான், “சகோதரன் பாக்ஸ்டர், தேவன் என்ன செய்யப் போகிறார் என்பதை நான் உங்களிடம் கர்த்தருடைய நாமத்தில் கூறும்போது, அது ஒரு தரிசனம் என்பதை உங்களிடம் கூறுவதை நீங்கள் அறிந்து கொள்ளும்படி போதுமான அளவு என்னோடு கூட நீங்கள் இருந்து வருகிறீர்கள்” என்றேன். அவர், “சகோதரன் பிரான்ஹாமே, அது உண்மையாகவே தேவனிடமிருந்து வந்த ஒரு தரிசனம் தானா?” என்று கேட்டார். நான், “ஆம், சகோதரன் பாக்ஸ்டர்” என பதிலளித்தேன். அவர், 'அப்படியானால் இது முதற்கொண்டு, நான் அதலிருந்து என் கரங்களை விலக்கி விடுகிறேன். நான் - நான் இதற்கு மேலும் அதனுடன் எதையும் செய்ய மாட்டேன். அது தேவனிடமிருந்து வந்த ஒரு தரிசனம். நாம் இங்கே பிணைக்கப்பட்டுள்ளோம்'' என்றார். ஆனால் அவர், “இப்பொழுது நீங்கள் புறப்படுங்கள்; நான் உங்களுடன் நிற்பேன்” என்றார். நான், “சரி, சகோதரன் பாக்ஸ்டர்” என்றேன். நல்லது, நான் சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்களிடம் தர்க்கம் செய்து , “ வேண்டாம்” என்றேன். நல்லது, இறுதியாக ஒரு மணி ஆனது, ஜனங்கள் காத்துக்கொண்டிருந்தனர். நாங்கள் அந்தச் சிறிய... க்குச் சென்ற போது... நான் அதை தவறாக உச்சரிக்கிறேன். நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். கிளர்க்ஸ்டார்ப் அல்லது அந்த வரிசையிலுள்ள ஏதோவொன்று, என்னவென்று நீங்கள் அறிந்து கொள்வதற்கு போதுமான அளவு அருகில். 26ஆனால் நாங்கள் அங்கு சென்று சேரும்போது, அங்கே போதுமான ஜனங்கள் இருந்தனர், பட்டணம் நிரம்பியிருந்தது. பட்டணத்தில் இடமே இல்லாதிருந்தது, அங்கே இடமே இல்லை. அது ஒரு அருமையான நாள். அவர்கள் என்னை ஒரு ஊழியக்காரரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அது சகோதரன் ஃபோரி அவர்களின் வீடாகும். அவர் மிகவும் அருமையான கிறிஸ்தவ சகோதரன். நாங்கள் அந்த மேசையில் அவருடைய மனைவியின் அருகில் உட்கார்ந்த உடனே, அவருடைய மனைவியின் கோளாறு என்னவென்றும், அவள் எவ்வாறு கஷ்டப்படுகிறாள் என்றும் கர்த்தர் என்னிடம் கூறி சரியாக அப்பொழுதே அவளை சுகமாக்கினார். அவள் அது முதற்கொண்டு தொல்லைப்படவேயில்லை. பாருங்கள், பாருங்கள்? நான் தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பே இருந்தபோதிலும், தேவன் தம்முடைய இராஜாதிபத்தியத்தில், ஆசீர்வதிப்பார். ''வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலின்றியே கொடுக்கப்படுகின்றன.'' பாருங்கள்? எனவே அதன்பிறகு நாங்கள் அங்கு சிறிது தங்கினோம். 27நான் அன்றிரவு செல்வதற்கான ஒரு கூட்டத்தை அவர்கள் ஏற்கனவே பெற்றிருந்தனர். அந்த கூட்டத்திற்கு என்னை அழைத்துச் செல்வதற்காக நேரம் வந்தபோது, அங்கு முழு கூட்டத்தினரையும் மூழ்கடித்து கொல்லுவது போன்ற ஒரு வெப்பமண்டல புயல் வந்தது. அன்றிரவு பத்துமணிக்கு என்னை அந்த இடத்திற்கு அருகில் கூட கொண்டு செல்ல அவர்களால் முடியவில்லை, அப்படியே..... அந்த அப்படிப்பட்ட வெப்ப மண்டல புயல்களில் ஒன்றை நீங்கள் இதுவரை கண்டிருக்கவே மாட்டீர்கள்: மின்னல், அதன் வெளிச்சம் பெரும்பாலும் இந்த அறையிலுள்ள வெளிச்சத்தைப் போன்றிருக்கும், தொடர்ச்சியாக பளிச்சென வெளிச்சமுடைய மின்னல்களும், இடிமுழக்கங்களும் அங்கிருந்தன. சரி. அன்றிரவு ஆராதனை இல்லை. நல்லது, அந்த சகோதரர்கள்... நான் திரும்பி வந்தேன்; நான், “நான் உங்களிடம் சொன்னேனே. இங்கே வரவேண்டாம் என்று கர்த்தர் சொன்னார் என்று. நான் கர்த்தருடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்கிறேன். நான் ஜோஹன்னஸ்பர்க்குக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதாயிருக்கிறது'' என்றேன். “நல்லது, நாம் இங்கே வருவோம் என்று இந்த சகோதரர்களிடம் வாக்கு கொடுத்திருக்கிறபடியால் நம்மால் அதைச் செய்ய முடியாது. நாம் இதைச் செய்ய வேண்டியதாயுள்ளது.'' 28நான் அவர்களிடம், “நல்லது, உங்களுக்குத் தான். இந்த பாவம் உங்கள் மீது தான் இருக்கிறது, என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்'' என்றேன்........ பணமும் இல்லை , எதுவுமில்லாதிருந்தது. நான் மிகவும் மோசமான ஒரு நிலையில் இருந்தேன். அந்தக் கூட்டத்தை நடத்த என்னிடம் பணமில்லாதிருந்தது. இப்படியாக நான் சரியாக அதற்கு விரோதமாயிருந்தேன். எனவே பிறகு, நான், “ நல்லது...'' என்றேன். நாங்கள் அன்றிரவு காத்திருந்தோம். அடுத்த நாள் காலை அழகும் அருமையுமாய் புலர்ந்தது. ஆனால் சற்றேறக்குறைய அந்த ஆராதனைக்கான நேரத்தில் ஒவ்வொருவரையும் மரணத்திற்கு உறையச் செய்வது போன்ற ஒரு பனிப்புயல் வந்தது. நான் அந்தக் கட்டிடத்திற்கு திரும்பி வந்து சொன்னேன், “நான் உங்களிடம் சொல்லவில்லையா? இப்பொழுது, நாளை இரவு, நாம் ஒரு பூமியதிர்ச்சியைக் கொண்டிருக்கப் போகிறோம்” என்று. பாருங்கள்? மேலும் நான் அவர்களிடம், “சகோதரர்களே, நாம் தேவ சித்தத்திற்குப் புறம்பாக இருக்கிறோம்” என்றேன். அவர்கள், “நாம் ஒரு பூமியதிர்ச்சியைக் கொண்டிருக்கப் போகிறோம் என்றா கூறுகிறீர்கள்'' என்றனர். நான், “நாம் பூமியதிர்ச்சியைக் கொண்டிருப்போமா இல்லையாவென்று எனக்குத் தெரியாது. நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன். ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது. நாம் தேவ சித்தத்திற்குப் புறம்பே இருக்கிறோம்” என்றேன். அதிகாலை இரண்டு மணியளவில் அவர்கள் இன்னுமாக கடினப்பட்டுக் கொண்டிருந்தனர். நான் இறுதியாக, “இப்பொழுது கவனியுங்கள். நான் ஜோஹன்ஸ்பர்க்குக்குத் திரும்பிச் சென்று, அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருந்து சகோதரன் ஜாக்ஸனிடம் சென்று, அதன்பிறகு அங்கிருந்து டர்பனுக்குச் சென்று, அங்கிருந்து நான் வீட்டிற்குப் போக வேண்டும் என்று தேவன் என்னிடம் கூறினார்” என்று கூறினேன். அப்போது... “ ஓ , வேண்டாம்!” 29நான், நல்லது, “நாம் செய்தித்தாள்கள் மற்றும் மருத்துவ சங்கத்தின் ஆதரவையும் ஒவ்வொன்றின் ஆதரவையும் பெற்றிருக்கிறோம், அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் தாங்கள் சாப்பிடவும் மற்றும் ஒவ்வொன்றையும் செய்ய முடியும் மற்றும் அவர்களுக்கு தங்குமிடம் எல்லாம் இருக்கிறது. இங்கே நாம் பரந்த புல்வெளியில் படுத்திருக்கிறோம், இடமேயில்லை, சாப்பிடவும் எதுவுமின்றி மூழ்கடிக்கப்படுகிறோம், மற்ற ஒவ்வொரு காரியமும் இங்கிருக்கிறது, நாம் கர்த்தருடைய சித்தத்திற்கு வெளியே இருக்கிறோம் என்பதை உங்களால் காண முடியவில்லையா, சகோதரர்களே?“ என்றேன். “நல்லது, எப்படி இருந்தாலும் இதை நாங்கள் செய்வோம் என்று நாங்கள் வாக்குக்கொடுத்துள்ளோம்”, நல்லது, அவர்கள் நிச்சயமாகவே மதிப்புமிக்க மனிதர்களாயிருந்து தங்களின் சகோதரர்களுக்குத் தாங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் சகோதரனே, இன்றிரவு என்னுடைய கூட்டத்தில் இவ்விதம் சம்பவிக்கக் காரணம் என்னவெனில், நாம் ஓரல் ராபர்ட்ஸைப் போலவே, இந்த மற்ற நபர்களைப் போலவோ நம்மால் ஏற்பாடு செய்ய முடியாது. அவர்கள் மரிக்காமல் இருந்தால், இப்பொழுதிலிருந்து இரண்டு வருடங்களில் அவர்கள் எங்கு போவார்கள் என்பதை அறிந்திருப்பார்கள். அவர்களால் தங்களுடைய ..... ஐ ஏற்பாடு செய்ய முடியும். நானோ அனுதினமும் ஒவ்வொரு கூட்டத்திலும் வழிநடத்தப்பட வேண்டியதாயிருக்கிறது. அவர் எங்கெல்லாம் போகச் சொல்லுகிறாரோ, நான் அங்கு போக வேண்டியதாயிருக்கிறது. நான் நாளை இங்கிருக்க வேண்டாமென்று அவர் இன்றிரவு சொன்னால் நான் நாளை இங்கே இருக்க மாட்டேன். நான் இங்கே ஒரு - ஒரு வருடம் தங்கியிருக்க வேண்டுமென்று அவர் இன்றிரவு கூறுவாரானால், நான் இங்கே சரியாக ஒரு வருடம் தங்கியிருப்பேன், நான் சீயோனின் (சகோ. பிரான்ஹாம் தற்போது பிரசங்கித்துக்கொண்டிருக்கும் இடம் - தமிழாக்கியோன்) புறநகர் பகுதியில் நிற்க வேண்டியிருந்தாலும். அவர் எங்கெல்லாம் போகச் சொல்லுகிறாரோ, நான் சரியாக அங்கே செல்கிறேன். அதாவது அவர் சொல்லுவது வரை நான் அங்கேயே தங்கியிருப்பேன். அது அந்த வழியில் தான் இருக்க வேண்டியுள்ளது. நான் பிரயாண திட்டத்தை உண்டாக்க முடியாது. நான் அடுத்த நாள் எங்கு இருப்பேன் என்பதை உங்களிடம் கூற இயலாது; எனக்குத் தெரியாது. நான் எந்த வாக்கையும் கொடுப்பதில்லை. 30கர்த்தருக்குச் சித்தமானால், நாம் அடுத்த வாரம் ஒருவேளை சிகாகோவுக்குப் போகலாம். ஒருவேளை கர்த்தர் அனுமதிக்காமல், நான் சீயோனிலேயே (Zion) தங்கியிருக்கும்படி இன்றிரவு அவர் என்னிடம் பேசுவாரானால், நான் சியோனிலேயே தங்கியிருப்பேன். அவர் இன்றிரவு என்னை சந்தித்து, கூறுவாரானால்..... ஒரு நாள் நான் சீயோனை விட்டுச் சென்று, அதோ அங்கு மிஸ்ஸோரியிலுள்ள செயின்ட் லூயிஸில் ஒரு அருமையான கூட்டத்தைக் கொண்டிருந்தேன். அதே நாள் இரவில், பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து, செயின்ட் லூயிஸை விட்டு சீயோனுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று என்னிடம் கூறினார். நான் அடுத்த நாள் செயின்ட் லூயிஸை விட்டுத் திரும்பிச் சென்று, அதற்கடுத்த நாள் சீயோனில் கூட்டங்களைத் தொடங்கினேன். உங்களுக்கு அது ஞாபகமிருக்கும். கர்த்தர் என்ன செய்தார் என்பதை நீங்கள் பாருங்கள்? கவனியுங்கள்? அவரைப் பின்பற்றுங்கள். எனவே அதன்பிறகு, அந்த இரவில் நாங்கள் விவாதித்து, விவாதித்து, விவாதித்துக்கொண்டே சென்றோம். நான், “வேண்டாம்! நாளைக்கு சரியாக ஜோஹன்ஸ்பர்க்குக்கு திரும்பிச் செல்ல வேண்டும்” என்று கூறினேன். 31நல்லது, நாம் ஜோஹன்ஸ்பர்க்கை அடைந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? நான் வீட்டிற்கு செல்ல என்னிடம் பணமில்லை. நான்.. வீட்டிற்கு வருவது சரியான ஒன்றாக இருக்காது. நான் அந்தக் கூட்டத்திலேயே தங்கியிருக்க வேண்டுமென்று எண்ணினேன். போவதற்கு யார் உதவி செய்வார்கள்? நாம் என்ன செய்யப் போகிறோம்? ஓ, நான் ஒரு இக்கட்டான நிலையில் இருந்தேன். அது அப்படித்தான் காணப்பட்டது.... நான், “சரி, நீண்ட காலத்திற்கு முன்பே பவுல், இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக் கேட்டு, கிரேத்தா தீவை விட்டு புறப்படாமல் இருக்க வேண்டியதாயிருந்தது (அப் 27:21) என்று கூறியது போன்று இது உள்ளது'' என்றேன். எனவே நான், “இப்பொழுது, தேவன் ஒரு அனுமதிக்கும் சித்தத்தை உடையவராயிருக்கிறார். ஆனால் தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் கிரியை செய்ய எனக்கு விருப்பமில்லை. நான் எப்பொழுதும் அவருடைய பரிபூரண சித்தத்தையே விரும்புகிறேன் (பாருங்கள்?'' என்றேன்.... ஒருவேளை..... நான் இரண்டாந்தரமாக கிரியை செய்ய விரும்பவில்லை. நான் என்ன செய்யவேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதை அறியும்படிக்கு நான் விரும்புகிறேன், மேலும் நான் சென்று அதையே செய்வேன். எனவே, பிறகு - பிறகு, அவர்கள் அனுமதிக்கும் சித்தத்தை கேட்டவுடனே, ஓ , என்னே , அது அந்தக் காரியம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. 32நல்லது, நான் அறைக்குள் சென்றேன். மேலும் நாங்களெல்லாரும் வெவ்வேறான அறைகளுக்குள் சென்றோம். நான் ஜெபிக்கும்படி என் அறையினுள் சென்றேன். அங்கே பின்னால் இருக்கும் என்னுடைய பையன் பில்லி என்னுடன் தான் தூங்கிக்கொண்டிருந்தான். நாங்கள் இரண்டு சிறிய படுக்கைகளைக் கொண்டிருந்தோம். ஒன்றிலிருந்து சிறிது தள்ளி அடுத்த படுக்கை இருந்தது. சகோதரன் ஜாக்ஸன், சகோதரன் ஃபோரியின் வீட்டில் நீங்கள் தங்கியிருக்கிறீர்கள் என்று நான் யூகிக்கிறேன், அந்தப் படுக்கைகள் எங்குள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். அந்த ரோடு பக்கமாக உள்ளன. பில்லியும் நானும் ஜெபிக்கும்படி உள்ளே சென்றோம்; நாங்கள் உள்ளே சென்றபோது, என்னுடைய பையன் பில்லி என்னுடைய தோளின் மீது தன்னுடைய கரத்தை வைத்தான். அவன், “அப்பா, நீங்கள் அந்த பிரசங்கிமார்களின் குழுவை கவனிக்க வேண்டாம். தேவன் உங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு நீங்கள் கவனம் செலுத்துங்கள், அந்த பிரசங்கிமார்களின் குழுவிற்கல்ல'' என்று என்னிடம் கூறினான். நான் எப்பொழுதாவது என் மகனிடமிருந்து விவேகமான காரியத்தை கேட்டிருந்தால், அது அப்போது தான், அல்லது...?... அது சரியே. நான், “தேனே, நான் முழுவதுமாக துண்டு துண்டாக கிழிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறினேன். அவன், “இதோ பாருங்கள் அப்பா, நாம் ஏதோவொரு வழியில் வீட்டிற்கு போய்விடலாம்” என்றான். 33நான் “தேனே, அதைக்குறித்த காரியம் என்னவெனில் வீட்டிற்கு போவதல்ல; ஆனால் நான் ஜோஹன்னஸ்பர்க்குக்குத் திரும்பிச் சென்று, அந்த வழியில் இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது தான் அந்த யோசனை” என்றேன். அவன், “அப்பா, நான் உங்களுடன் தரித்திருப்பேன், சகோதரன் பாக்ஸ்டரும் அப்படியே செய்வார் என்பது எனக்குத் தெரியும் ” என்றான். எனவே அவன், “நாங்கள் உம்முடன் இருக்கிறோம் என்பதை சற்று ஞாபகம் கொள்ளுங்கள் ” என்று கூறினான். எனவே நான், “பில்லி, நீ என்னுடன் ஜெபி” என்றேன். அவனுக்கு நிச்சயமாகவே தூக்கம் வந்தது, அவன் அப்படியே ஒரு சிறுபிள்ளையாயிருந்து, படுக்கையில் தவழ்ந்து சென்றான். அது ஏறக்குறைய ஒன்று அல்லது இரண்டு மணியாக இருந்தது. ஏறக்குறைய காலை மூன்று மணியளவில், அவர் அறையினுள் வந்தார். நான் அவரை உணர்ந்தேன். அவர் அந்தப் படுக்கைக்கு பக்கத்தில் வந்தார். நான் “ இந்த மனிதர்கள் யார்? அவர்களுடைய விருப்பம் என்ன?” என்றேன். 34அவர் “போ'' என்றார். ”போ. அவர்கள் உன்னை அதனுடன் பிணைத்து விட்டனர்'' என்றார். அவர் “போ. ஆனால் நீ அதற்காக கிரயம் செலுத்துவாய் என்பதை நினைவில் கொள், நீ அறிந்து கொள்வாய், இப்பொழுது போவதற்கான என்னுடைய அனுமதி உனக்குண்டு என்பதை நீ கட்டாயம் அறிந்தாக வேண்டும், நாளை காலை ....... நீ சென்று உன்னுடைய பையனை எழுப்பு” என்று என்னிடம் கூறினார். தேவன் பில்லியை கனம் பண்ணினார். அவர் என்னிடம், “நீ சென்று உன்னுடைய பையனை எழுப்பி, 'நாளை காலையில் ஞாயிறு பள்ளியில் அவர்கள் தங்களுடைய ஞாயிறு பள்ளி கூட்டத்தைக் கொண்டிருக்கும் போது காலையில் அது ஒரு தெளிவான நாளாக இருக்கப்போகிறது' என்று சொல்” என்றார். அப்போது மழை பெய்து கொண்டும் மேகமூட்டமாகவும் மோசமான சீதோஷ்ண நிலையும் இருந்தது. அவர், “ஆனால் அது அருமையான நாளாய் இருக்கப்போகிறது. சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கும், அது மீண்டும் வெப்பமான நாளாயிருக்கும்” என்றார். மேலும், “நீ... அவர்கள் உன்னை அழைத்து வர ஆள் அனுப்புவார்கள். வியாதியஸ்தர்களுக்காக நீ ஜெபிக்கும்படி உன்னை அழைத்து வர சகோதரன் பாக்ஸ்டர் ஆள் அனுப்புவார், கூட்டங்கள் ஏற்கனவே காலதாமதமாகி விட்டிருக்கிறபடியால், அது எப்படியும் இன்னும் மூன்று நாட்களுக்கு இருக்கப் போகிறது. ”உன்னுடைய கூட்டங்கள் மிகவும் தாமதமாகி விட்டது , நீ..... வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்கும்படி உன்னை அழைக்க அவர் உன் மகனை அனுப்பப் போகிறார். ஆகவே ஆயத்தமாயிருந்து அங்கு போ, மேலும் அவர் சொன்னார், “அதன்பிறகு - நீ அதைச் செய்யும்போது, உன் மகன் ஒரு சிறிய கருப்பு நிற காரில் ஒரு வாலிபனுடன் உனக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பான். உன்னை அழைத்துப் போக வருகிற வழியில் அவன் இன்னொரு வாலிபனையும் ஏற்றிக்கொண்டு வருவான்” என்றார். அது சட்டத்திற்குப் புறம்பான ஒரு காரியம், ஆனாலும் திரும்பிச் செல்லும் வழியில் அவன் இன்னொரு வாலிபனையும் கூட்டிக்கொண்டு வருவான், அவன் உன் கவனத்தை ஈர்ப்பான், அவர்கள் வெள்ளை சஃபாரி உடையில் இருக்கும் உள்ளூர்க்காரராய் இருப்பார்கள், ஒரு பாலத்தின் பக்கத்தில் உள்ள ஒரு தைல மரத்தின் அருகில் கையில் ஒரு கொம்பை வைத்துக்கொண்டு இன்னொரு ஆளை அடிப்பதற்காக நின்று கொண்டிருப்பார். இதை வைத்து நான் உனக்கு அனுமதி அளித்தேன் என்பதை அறிந்து கொள்வாய், ஆனால் நீ அதற்காக வேதனைப்படுவாய் என்பதை நினைவில் கொள்'' என்றார். 35எனவே நான் அத்தரிசனத்தை விட்டு வெளியே வந்த போது நான் சென்று பில்லியை எழுப்பி நான், “பில்லி, கர்த்தருடைய தூதன் இப்பொழுது தான் என்னை சந்தித்தார்'' என்று கூறி, அவர் சொன்னவைகளை அவனிடம் கூறினேன். நான் அறையினுள் நடந்தேன். இப்பொழுது, இப்பொழுது, சகோதரன் பாக்ஸ்டர் சரியாக கட்டிடத்தின் பின்னால் உட்கார்ந்து, கவனித்துக் கொண்டிருக்கிறார். நான் அறையினுள் நடந்தேன், இங்குதான் அது நிரூபிக்கப்பட்டது, நண்பர்களே, கவனியுங்கள். இதை இழந்துவிட வேண்டாம். இப்பொழுது, அவர் உங்களிடம் அதைப்போன்று அந்தவிதமாக இடைபடாமல் இருக்கலாம். நான் ஒரு வித்தியாசமான நபராக இந்த மூலையில் பிறந்தேன். நான் வினோதமானவனாகவும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டவனாகவும் இருக்கிறேன் என ஊகிக்கிறேன். உங்களுடைய ஜீவியம் அதைப்போன்று இல்லாமலிருக்கலாம், ஆனால் நான் இந்த ஒரு காரியம் எனக்குத் தெரியும். நீங்கள் செய்யும்படிக்கு தேவன் என்ன கூறுகிறாரோ அதையே செய்யுங்கள். வேறு யார் என்ன கூறினாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்க வேண்டாம். தேவன் கூறுவதையே நீங்கள் செய்யுங்கள். அது தேவன் தான் என்று அறிந்திருப்பதில் நீங்கள் நிச்சயமாயிருங்கள். ஏதோ கற்பனையோ அல்லது உணர்ச்சியோ அல்ல. அது தேவன் தான் என்பதில் நீங்கள் நிச்சயமாயிருங்கள், பிறகு தேவனுடைய வழியை பின் தொடருங்கள். நீங்கள் போக வேண்டும் என்று அவர் விரும்பும் இடத்திற்கு அவர் உங்களைக்கொண்டு போவார். 36இவ்வாறாக நாங்கள் அறையினுள் நடந்தோம், சகோதரன் பாக்ஸ்டர், சகோதரன் பாஸ்வர்த், திரு. ஸ்டாட்ஸ்க்ல வ், அவர் இன்றிரவு கூட்டத்தில் இருக்கிறார் என நம்புகிறேன். அந்த மனிதர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்த மனிதர்களில் குறைந்தது இரண்டு பேராவது இப்பொழுது இங்கே உள்ளனர். அவர்களெல்லாரும் ஒரே அறையில் ஒருவர் மேல் ஒருவராக உறங்கிக்கொண்டிருந்தனர், ஒரே அறையில் அவர்களில் நான்கு பேர் அல்லது இன்னும் சரியாக சொல்வோமானால் அவர்களில் மூன்று பேர் தங்கினர். நான் அறையில் நடந்து சென்று, “சகோதர்களே நான் கர்த்தர் உரைப்பதாவது என்பதை கொண்டிருக்கிறேன்” என்று அவர்களிடம் கூறினேன். நான், “நாம் கிம்பர்லிக்கும், கிளர்க்ஸ்டாப்புக்கும், பிளம்பாண்டினுக்கும், கேப்டவுனுக்கும் போய்க் கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் தவறு செய்து கொண்டிருக்கிறோம். நாம் தவறு செய்து கொண்டுதான் இருக்கிறோம். நாம் இங்கிருந்து திரும்பி ஜோஹன்னஸ்பர்க்குச் சென்று, அங்கிருந்து சகோதரன் ஜாக்ஸனிடம் சென்று, அங்கிருந்து இந்த டர்பனுக்கு செல்வதுதான் கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது'' என்று கூறினேன். 37மேலும் நான், “ஆனால் அவர் இந்தக் காலையில் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தை எனக்களித்து, எனக்கு அடையாளங்களைக் கொடுத்திருக்கிறார்” என்றேன். அவர் என்னிடம் சொன்னவைகளை அவர்களிடம் கூறினேன். மேலும் நான், “இப்பொழுது வெளியே பகல் வெளிச்சம் உள்ளது. இது ஒரு அருமையான நாள். இந்தக் காரியங்கள் சம்பவிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், இது கர்த்தருடைய சித்தமல்ல” என்று கூறினேன். சகோதரன் ஃபிரட் பாஸ்வர்த்தை எத்தனை பேர் அறிவீர்கள்? உங்கள் கரங்களைப் பார்ப்போம். அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? அவர் நல்ல மனிதர் தான். அவர் என்னுடைய தகப்பனை போல எனக்கு நெருக்கமானவர். அப்படி இருப்பினும், என் பக்கத்தில் பிரசங்க பீடத்தில் நின்று, இந்த வரத்தைக் குறித்து பிரசங்கித்தவரும் மேடையைக் கட்டியவரும், அதைக்குறித்து அடிக்கடி பேசியவருமான சகோதரன் பாஸ்வாத், “நான் - நான் எழுபது சொச்சம் வயதுள்ளவனாயிருக்கிறேன். அப்போஸ்தலர்களின் நாட்கள் தொடங்கி, நான் இதைப்போன்ற எதையும் கண்டதுமில்லை, வாசித்ததுமில்லை” என்று கூறினார். தன் முழு இருதயத்தோடும் என்னில் விசுவாசம் வைத்திருக்கிறார்..... 38அப்படிப்பட்டவர் எழுந்து, “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். நாங்கள் சொல்லும் வழியாக செல்ல வேண்டும் என்பது தான் உமக்கு தேவனுடைய சித்தமாய் இருக்கிறது'' என்றார். நான், “சகோதரன் பாஸ்வர்த், அப்படியல்ல” என்றேன். அவர், “ நல்லது, சகோதரன் பிரான்ஹாம், ஒருமுறை சாத்தான் ஆரோனுக்கு ஒரு கள்ளத் தரிசனத்தைக் கொடுத்த இடத்தை நான் வாசித்திருக்கிறேன்'' என்று கூறினார். நான், “சகோதரன் பாஸ்வர்த், நீங்கள் எனக்கு ஒரு தகப்பனாக இருக்கிறீர்கள்'' என்றேன். ஆனால் நான், ”இதோ பாருங்கள். இது ஒரு கள்ளத் தரிசனமல்ல. இது தேவனிடமிருந்து வந்த ஒரு தரிசனம். இது நானாக உயர்வாக மதித்து செய்யும், என் ஊழியமும், என்னுடைய கருத்துமாயிருக்கிறது, என்னுடையது மட்டுமல்ல, கர்த்தருடைய நாமம் அதன் மேல் சார்ந்து உள்ளது. (நீங்கள் கூறுவது) தவறு'' என்றேன். அவர் “ இல்லை. நீங்கள் அந்த வழியில் போவீர்களானால், நீங்கள் கேள்விப்பட்டதற்கும் நினைத்தற்கும் மேலாக மிகவும் ஏராளமானவைகளைக் காணப்போகிறீர்கள்'' என்றார். 39நான் சுற்றிலும் திரும்பி சகோதரன் பாக்ஸ்டரை நோக்கிப் பார்த்தேன், அவர் தன்னுடைய கண்களை தேய்த்துக் கொண்டிருந்தார். நான் சகோதரன் ஸ்டாட்ஸ்க்லல்வை நோக்கிப் பார்த்தேன். நான் அப்போது நினைத்தேன், “அங்கே அது உள்ளது. ஒரு தனிப்பட்ட மனிதர் உங்களுக்கு எவ்வளவு நெருங்கியவராயிருந்தாலும் அது பொருட்டல்ல. நீங்கள் மாம்ச புயத்தின் மேல் நம்பிக்கை வைக்க முடியாது .'' அது உங்களுடைய தாயாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை . இதை ஞாபகம் கொள்ளுங்கள், ஒரு சமயம் தேசத்தில் ஒரு - ஒரு தீர்க்கதரிசி இருந்தான், மற்றொருவன் சென்று தீர்க்கதரிசனம் உரைத்தான், என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவனிடம் கூறினான். “புசிக்கவோ குடிக்கவோ வேண்டாம்'' என்று (தேவன் கூறினதாக) அவன் கூறினான், அது 1 இராஜாக்கள் 13-ம் அதிகாரத்திலுள்ளது. இந்த தீர்க்கதரிசியோ சென்று அவனிடம், ”உம்மைப்போல் நானும் தீர்க்கதரிசி தான், அவன் அப்பம் புசித்து தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோட சொன்னான் “ என்று அவனிடத்தில் பொய் சொன்னான். அவன் தேவனுக்கு பதிலாக அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக்கேட்டான். அதனால் என்ன சம்பவித்து என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் தன்னுடைய ஜீவனை இழந்தான். இரண்டு பேருமே தீர்க்கதரிசிகள் தாம்...... அவர்கள் யார் என்பது ஒரு பொருட்டல்ல, செய்ய வேண்டுமென்று தேவன் கூறுவதையே நீங்கள் செய்யுங்கள். 40நான் இங்கிருந்து செல்வதற்கு முன்னால், ஒரு நாள் நான் ஷிரீவ்போர்ட்டில் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் என்மேல் விழுந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது, உனக்கு தென் ஆப்பிரிக்காவில் ஒரு கண்ணி வைக்கப்பட்டுள்ளது'' என்றார். யாராவது, ஷிரீப்போர்ட் கூட்டத்தில் இருந்தீர்களா? உங்கள் - உங்கள் கரங்களைப் பார்க்கலாம். நான் இங்கிருந்து செல்வதற்கு சிறிது முன்னால், ஷரீவ்போர்ட்டில் நடந்த கூட்டத்தில் நான் அந்த தீர்க்கதரிசனத்தை பேசினதை கேட்டிருக்கும் யாராவது இருங்கிருக்கிறீர்களா? சரி, எப்படியாயினும் இந்த சிறு குழுவில் யாரும் இல்லாமலில்லை. ஆனால் அது என்னுடன் சகோதரர்கள் மத்தியில்தான் என்பது எனக்குத் தெரியாது. இப்பொழுது, அந்த காரியமானது. நாங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். நாங்கள் கிம்பர்லியை அடைந்தவுடனே, அங்கே அல்லது அடுத்த நிறுத்தத்தில், ஒரு மூத்த வயதான நல்ல மனிதர் அங்கே இருந்தார், ஆனால் அவர் சொன்னார்..... ஆயிரக்கணக்கான ஜனங்கள்.... அந்த வயதான சகோதரன், “வேண்டாம் ஐயா, என்னுடைய சபையைத் தவிர வேறு எங்கிலும் நீங்கள் அதைக் கொண்டிருக்கப் போவதில்லை'' என்றார். அவருடைய சபையில் ஏறக்குறைய நானூறு ஜனங்கள் இருந்தனர். அங்கே ஏறக்குறைய பத்து, பன்னிரண்டு, பதினான்காயிரம் ஜனங்கள் இருந்தபோதிலும், அது அந்த சபையில் இருக்க வேண்டியதாயிருந்தது. 41சகோதரன் பாஸ்வர்த் கடுங்கோபம் கொண்டு, தன்னுடைய தொப்பியை ஆட்டிக்கொண்டே, “முட்டாள்தனம்! முட்டாள் தனம். அது ஒரு அவமானம்” என்றார். நான், “அது எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் அபரிமிதமானதாகும்” என்றேன். (பாருங்கள்?). “உங்களுக்குப் புரிகிறதா?” என்றேன். அவரோ, “ஓ, நான் அப்படிப்பட்டவைகளை கேட்டதேயில்லை” என்றார். இப்படியிருக்க, சகோதரன் பாக்ஸ்டரும் அதே போன்றே காணப்பட்டார். அவர்களிருவரும் வெளியே சென்று ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்தனர். சரி. அது எதைக் காட்டுகிறது என்பதை பாருங்கள். அதே போன்ற நிலையில் அப்பிரயாணத்தை மேற்கொண்டோம், ஒவ்வொரு இடத்திலும் பூசலான நிலையே காணப்பட்டது. நாங்கள்.... அங்கு சென்று அடையும் வரை எந்த கூட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. அது ஒருவருக்குத் தெரியும், அதைக் குறித்து அறிந்தவர். சகோதரன் ஜாக்ஸன், அது உங்களுக்குத் தெரியும். டர்பனில் நடந்த கூட்டத்தில் நாங்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் பேரை வெளியே கொண்டிருந்தோம், அவர்களில் முப்பதாயிரம் பேர் ஒரே நாளில் மனந்திருப்பினர். அது இருந்ததான ஒரே இடம் அதுவாக இருந்தது. வழி நெடுக நாங்களனைவரும் வியாதிப்பட்டோம். எங்களில் ஒவ்வொருவரும் வியாதிப்பட்டோம். நான் வீட்டிற்கு சென்றடைந்த போது, நான் ஏறக்குறைய மரித்த நிலையில் இருந்தேன். நான் அமீபாவைக் கொண்டிருந்தேன். அமீபா என்பது பாறைகளில் ஓட்டிக்கொள்ளும் சிறு சிப்பியைப் போன்று, வயிற்றிலுள்ள குடல் மண்டலத்திற்குள் சென்று ஒட்டிக்கொள்ளும் ஒரு ஒட்டுண்ணியான சிறு உயிரினம் ஆகும். அங்கேயே ஒட்டிக்கொண்டிருந்து... வரை அது உறிஞ்சிக் கொண்டிருக்கும். நல்லது, அது பல மணி நேரமாக அதன் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அது இரத்த நாளத்திற்குள் அடைந்து, நுரையீரலுக்குள் வந்து திடீரென வெடித்தால், நீங்கள் அப்போது பிழைத்து விடுவீர்கள், அது மூளையில் சென்று உடைந்து பின்பு, இருதயத்தை அடையுமானால், நீங்கள் மரித்து விடுவீர்கள். அவர்களால் அதைக்குறித்து செய்யக்கூடியது எதுவுமில்லை. என்னுடைய கண்கள் ஏறக்குறைய வீங்குவது மட்டும் நான் தரையில் நடந்துகொண்டே அழுது ஜெபித்து, அழுது ஜெபித்து, அழுது ஜெபித்துக் கொண்டேயிருந்தேன்..... என்னுடைய மனைவி காலை உணவுக்கு என்னை நடத்திச் செல்ல வேண்டியதாயிற்று. தேவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை . 42ஒரு நாள், காலையில், நான் அங்கே என்னுடைய தலைக்குப் பின்னால் என் கரத்தை வைத்துக்கொண்டு படுத்தவாறு, “ தேவனே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடைய எடை குறைந்து மெலிந்து மெலிந்து எல்லா நேரமும் மோசமாகி மோசமாகிக் கொண்டே சென்றேன். எதுவுமில்லை... மோசமாகிக் கொண்டேயிருந்தது. செய்யக்கூடியது எதுவுமில்லை, எல்லா நேரமும் மோசமானதாயிருந்தது. ஒரு நாள் காலையில், நான் அங்கே படுத்தவாறே, “ஓ, தேவனே, என்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது? இது பாதையின் முடிவென்று நான் ஊகிக்கிறேன். நான் அழிந்து கொண்டிருக்கிறேன். நான் வருந்துகிறேன்'' என்று நினைத்தேன். நான் வருத்தப்பட்டேன். நான், “தேவனே, நான் இனிமேலும் அப்படி செய்ய மாட்டேன், நான் உம்முடைய கோட்டைத்தாண்டி விட்டேன் என்பதை நான் அறிவேன். மீண்டும் அவ்வாறு செய்ய மாட்டேன், கர்த்தாவே, உம்முடைய இருதயத்தில் எனக்காக இரக்கம் இருக்குமானால், தயவாய் என்னை மன்னியும் ” என்று எண்ணினேன். நான் பகல் நேரத்தில் என்னுடைய வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, தரையில் மேலும் கீழும் நடந்தேன். என்னுடைய மனைவி, “தேனே என்ன விஷயம்?” என்று கேட்பாள். நான், “ஓ, இனிய இருதயமே, நான் எவ்வாறு உணருகிறேன் என்பதை நீ மாத்திரம் அறியக்கூடுமானால்” என்பேன். “நான் தேவ சித்தத்திற்கு எதிராக சென்று விட்டேன். நான் இங்கே ஏறக்குறைய நொறுக்கப்பட்டுள்ளேன். என்னுடைய ஊழியம்.... நான் சகோதரன் பாக்ஸ்டரிடம் கூறினேன்'' என்றேன். நான், கர்த்தர் என்னிடம் பேசியிருக்கிறார்...'' என்றேன். நல்லது, அவர் சரியாக இப்பொழுதே சாட்சியாயிருக்கிறார், அவர் மேடையில் மேல் வரக்கூடுமானால். நான், “கர்த்தர் உரைக்கிறதாவது, நான் (தேவனுக்கு சித்தமில்லாத) அந்தப் பயணத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை ஒரு கூட்டத்தைக் கூட நான் கொண்டிருக்க மாட்டேன்” என்றேன். அது அவ்வாறே சம்பவித்தது. இது ஏழாவது அல்லது எட்டாவது மாதம். பாருங்கள்? நான் அவரிடம் கேட்டேன். அவர் எதையாவது கூறும்போது அது சத்தியமாயிருக்கிறது. நான் என்னுடைய ஜீவனை சத்தியமாயிருக்கும் அதில் வைப்பேன். 43பிறகு, என்னுடைய இடத்திற்குத் திரும்பி வந்தேன். நான் தரையில் நடந்து கொண்டிருந்தேன், ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்னால். அது கடினமாக இருந்தது. ஒரு நாள் இரவு தரையில் நடந்து கொண்டே அழுது கொண்டிருந்தேன்..... நான் தூங்குவதற்கு சென்று படுக்கையில் படுத்தேன். நான் காலையில் ஏறக்குறைய மூன்று மணிக்கு படுக்கையை விட்டு எழுந்தேன். நான், “ஓ தேவனே, என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? எனக்கு என்ன சம்பவிக்கும்?” என்று கூறினேன். அங்கே படுத்தவாறே, நான் “ஓ, நான் மாத்திரம்...'என்றேன். சுமார் ஐந்து மாதங்கள், நான் தரையில் நிதானமாக நடந்தவாறு, அழுதுகொண்டே, வியந்து கொண்டிருந்தேன். ஜனங்கள் ஒவ்வொரு இடத்திலும் ஜெபித்துக் கொண்டிருந்தனர்.... நல்லது, நான் மிஞ்சிப்போனால் என்னுடைய வீட்டை விட்டு கூட வெளியே செல்ல முடியவில்லை. நான் அங்கேயே இருந்தேன். நான், “ஓ, ஓ, நான் என்ன செய்வது?” என்றேன். இப்படியிருக்க என்னுடைய எதிர்ப்பக்கத்தில் வசிக்கும் டாக்டர் அடேயர் என்னும் பெயருள்ள ஒரு சிறு நண்பர் எனக்கு உண்டு. நாங்கள் பள்ளிக்கு ஒன்றாக செல்வோம். அவர் அதைக்குறித்து கேள்விப்பட்டபோது, அவர் என்னிடம், “பில்லி பிரான்ஹாம் தம்பி, இரக்கம். தேவன் உம்மிடம் இரக்கமாயிருப்பாராக. உமக்காக எனக்கு செய்ய தெரிந்தது எதுவுமில்லை ” என்றார். நான், “டாக், நான் செய்ய வேண்டுமென்று அறிந்த ஒரே காரியம் என்னவெனில், தேவனிடம் மீண்டும் அவருடைய தயவை கண்டுகொள்வதாகும். நான் அவருடைய கோட்டைத் தாண்டிவிட்டிருக்கிறேன்” என்றேன். 44ஒரு நாள் காலையில், ஏறக்குறைய மூன்று மணியளவில், நான் அதோ அங்கு படுக்கையில் படுத்தவாறே, நான் ஏற்கனவே கூறியபடியே, நான்..... நான், “என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?” என்று கூறினேன். ஏறக்குறைய அதே சமயத்தில், ஏதோவொன்று அறைக்குள் அசைவாடுவதை நான் உணர்ந்தேன். உங்களுடைய ஞாபகத்தை இப்பொழுதே ஆயத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சம்பவிக்கப்போகும் ஏதோவொன்றை நான் உங்களிடம் கூறப்போகிறேன், அவர் அந்த அறைக்குள் வந்தார், அது அவரென்று நான் அறிந்து கொண்டேன். நான் உண்மையாகவே அப்படியே அசையாமல் படுத்தவாறே, அது இங்கே சுற்றிலும் அசைவதை நான் உணர்ந்தேன், அது வந்து, “வியூ-வியூ-வியூ” என்று போய்க்கொண்டிருந்தது. அக்கினி கீற்றுகள் ஓடுவது போல், அதைப்போன்று, அறையினுள் அசைந்து நான் இருந்த இடத்தில் வந்தது. அதற்கும் சற்று பிறகு, ஒருவர் என்னிடம் நடந்து வருவதை நான் கண்டேன். அவர் தட்டச்சு காகிதத்தைப் போன்ற ஏதோவொரு காகிதத்தைக் கொண்டிருந்தார். அது மடிக்கப்பட்ட விதமாக இதைப்போன்று அவருடைய கரத்தில் இருந்தது. அவர் என்னிடமாக நடந்து வந்தார். “நீ உன்னுடைய படுக்கையில், உன்னுடைய எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்று ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தாய்” என்றார். நான், “ஆம், கர்த்தாவே. என்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நான் வியந்து கொண்டிருந்தேன்” என்றேன். 45அவர் அந்தக் காகித்தை இதைப்போன்று எடுத்து அதை மடித்தார். அவர், “அங்கே நோக்கிப்பார். அங்கே ஒரு...?... அங்கே அவைகளில் சில கிடந்தன. ஆனால் அதன் மகத்தான குவியலாக அது காணப்பட்டது. அவர் இதைப்போன்று சுழற்றினார். அது முழுவதுமாக காட்சியை விட்டு மேலே பரலோகத்திற்கு சென்று விட்டது. 46அவர், 'அது சரியாகி விட்டது'' என்றார். நான் என் சுயநினைவுக்கு வந்தேன். நான் படுக்கையின் பக்கவாட்டில் சரியாக அந்த ஓட்டப்பாதையின் மத்தியில் அங்கே வெளியே என்னை உட்கார வைத்தார். டர்பன் கூட்டமானது நடந்து கொண்டிருந்து, என்னுடைய வலது பக்கத்தில் வரலாற்றுக்குள் சென்று மறைந்து போனதை நான் கண்டேன். நான் டர்பனில் இருந்ததைப் போன்று பூகோள ரீதியாக நான் தெற்கை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது அப்படியே சென்று மேற்கில் மறைந்து கொண்டிருந்தது, அப்பால் சென்று நீல நிறத்திற்கு மாறிவிட்டது, அந்த ஜனத்திரள். சரியாக எனக்கு முன்னால், பிரிவுகள் (Sections), அதாவது இதைப்போன்று பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தெருக்களைப் போன்று காணப்பட்டன. அங்கே மகத்தான ஜனக்கூட்டம் இருந்தது. 47அதன்பிறகு அவர் வந்து, என்னுடைய தலையை இதைப்போன்று கிழக்கு முகமாய், கிழக்கே நோக்கி இந்தியாவை நோக்கி திருப்பினார். அங்கே பத்தாயிரக்கணக்கான கறுப்பாக தோற்றமளிக்கும் ஜனங்கள், துப்பட்டா துணிகளை தோளில் போட்டுக்கொண்டு இருந்தனர். அவர்கள் தங்களுடைய கரங்களை மேலே தூக்கி, தேவனை துதித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மேலும் கீழும் குதித்து அலறி கூச்சலிட்டு தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். நான், “அற்புதம்!” என்றேன். 48ஏறக்குறைய அந்த சமயத்தில், நான் ஏதோவொன்று சரியாக எனக்கு மேலாக வருவதைக் கேட்டேன். இங்கே பரலோகத்தை விட்டு ஒரு மகத்தான வெளிச்சம் வந்தது. அது வேகமாக சுழலும் வெளிச்சமாக (Oscillating Light) காணப்பட்டது. அது ஏறக்குறைய அரை மைல் அல்லது அதற்கும் மேலாக பின்னால் வயல்வெளிக்குச் சென்றது. அங்கே பெரும் எண்ணிக்கையில் ஜனக்கூட்டம் நின்று கொண்டு, இடத்தை அடைத்துக் கொண்டிருந்தனர். நான், “ஓ கர்த்தாவே, அவர்களெல்லாம் அந்த கறுப்பாக காணப்படும் மனிதர்களா?'' என்றேன். அதன்பிறகு அவர் மீண்டும் இங்கே எனக்கு முன்பாக இருந்த ஜனக்கூட்டத்திற்கு முகமாக என்னை பின்னால் திருப்பினார். அங்கே அழகான வெள்ளை ஜனங்கள் இதைப்போன்று தங்களுடைய கரங்களை மேலே ஆகாயத்தில் உயர்த்தி நின்றுகொண்டு, தேவனை துதித்துக்கொண்டிருந்தனர். அதன்பிறகு அவர் மீண்டும் என்னை இதைப்போன்று பின்புறமாகத் திருப்பினார். அதன்பிறகு அந்தத் தூதன் உண்மையாகவே அருகில் வந்தார். அவர் இங்கே இருந்தார் என்பதை என்னால் கூற இயலும். அவர் சொன்ன அந்த எண்ணிக்கையை நான் கேட்டேன். இதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர், “அந்த பெரிய கூட்டத்தில் மூன்று இலட்சம் ஜனங்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார். 49நான் என் சுயநினைவுக்கு வந்து அவருடைய எண்ணைக் கேட்டேன். ஞாபகம் கொள்ளுங்கள், நான் டர்பனுக்கு கிழக்கே ஏதோவொரு இடத்தில், இந்தியாவில் என்று நம்புகிறேன், மூன்று இலட்சம் ஜனங்களைக் கொண்ட ஒரு கூட்டத்தைக் கொண்டிருக்கப் போகிறேன். அதாவது நீங்கள் அறிந்து கொள்ளும்படி அது சம்பவிப்பதற்கு முன்னே, உங்களுக்கு சொல்லப்படுகிறது. பின்லாந்தில் ஒரு பையன் உயிரோடு எழும்புவான் என்று நான் சொன்னவிதமாகவே. ஐக்கிய நாடுகளை விட்டு நாங்கள் புறப்படுவதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பாகவே, அந்த சிறு பையன் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்படுவான் என்றும் மற்றவைகளைக் குறித்ததுமான அந்த சாட்சியை உங்களில் அனேகர் கேள்விபட்டுள்ளீர்கள். 50இப்பொழுது இதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்போது நான் தேவனை துதிக்கும்படிக்கு என்னுடைய கரங்களை மேலே உயர்த்தினேன், நான் அவ்வாறு செய்தபோது, பாருங்கள், ஒரு வேதாகமம் இங்கே வந்தது. அது பவுல் புயலில் சிக்கும் இடத்திற்கு திருப்பப்பட்டிருந்தது. (அப் 27- தமிழாக்கியோன்). அதன்பிறகு இந்த வேதாகமத்தின் பக்கங்கள் பின்னால், பின்னால், பின்னால், பின்னால், பின்னால் திரும்பத்தொடங்கி யோசுவா முதலாம் அதிகாரத்திற்கு திரும்பிச் சென்று, ஏதோவொன்று இதைப்போன்று அந்த அதிகாரத்தை வாசிக்கத் தொடங்கியது. (யோசுவா 1:2,5,9- தமிழாக்கியோன்) “என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து இந்த யோர்தானைக் கடந்து...... செல்லுங்கள். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடு இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.' நான் எழுந்து என்னுடைய வேதாகமத்தை அடைந்தேன். அது அந்தரத்தில் இருந்தது. நான்..... நான், 'அது எங்கே சென்றது“ என்றேன். 51ஏறக்குறைய அந்த சமயம், என்னுடைய மனைவி கதவைத் தட்டுவதை நான் கேட்டேன். அவள் அறையினூடாக வந்திருந்தாள். அவள், “பில், ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள். மேலும் அவள், “இன்று காலை மூன்று மணியளவில், பிள்ளை தொந்தரவு செய்துகொண்டிருந்தது, நான் உங்களை எழுப்பும்படி வந்தேன். நான் கதவருகில் வந்தபோது...'' என்றாள். இப்பொழுது, என்னுடைய மனைவி மிகவும் ஆவிக்குரிய ஒரு ஸ்திரீயாக இருக்கிறாள், ஆனால் எங்கள் வீட்டில் இவ்விதம் சம்பவிப்பது இதுவே முதல் தடவையாகும். அவள் மிகவும் அமைதியான சாதுவான ஒரு ஸ்திரீ. அவள், “நான் அறைக்குள் போகத்தொடங்கினேன், ஏதோவொன்று என்னிடம், அங்கே போகாதே. ஒரு தரிசனம் அங்கே சென்றுகொண்டிருக்கிறது' என்று கூறினது'' என்றாள். அவள், “நான் மூன்று மணி நேரமாக இருக்கையில் உட்கார்ந்து, பிள்ளையை தாலாட்டியவாறு, காத்திருந்தேன்'' என்று கூறினாள். நான், 'ஆம், தேனே“ என்றேன். நான் அங்கிருந்த பெரிய வேதாகமமாகிய என்னுடைய வேதாகமத்தை கையிலெடுத்தேன், வேதாகமத்தின் அட்டையோடு ஒட்டப்பட்டிருக்கும் தனித்தாளில் அந்த தரிசனத்தை துரிதமாக எழுதினேன், அனேகர் வீட்டிற்கு வந்து அதை வாசித்தனர். 52நான் காலை உணவிற்காகச் சென்றேன். எனக்குக் சற்று கீழண்டை வசிக்கும் என் மாமியார் மிகவும் பரிசுத்தவாட்டியான, தேவ வைராக்கியமுள்ள ஒரு பெண்மணி ஆவார்கள். அவள் அங்கே வீட்டிற்கு மேலே ஓடி வந்தாள். அவள், “இன்று காலையில் இங்கே ஏதாவது சம்பவித்ததா? இன்று காலையில் நான் படுக்கையிலிருந்து எழுந்தபோது, நான் காலை உணவை ஆயத்தப்படுத்தும்படி, சென்ற இரவில் பயன்படுத்திய பாத்திரங்களை கழுவும்படிக்கு அந்த பாத்திரம் கழுவும் நீர் தொட்டியினருகில் (Sink) சென்றபோது, ஏதோவொன்று, 'மேலேயிருக்கும் அந்த வீட்டிற்குச் செல். சற்றுமுன் ஏதோவொன்று சம்பவித்தது என்றது” என்று கூறினாள். நான் அந்த தரிசனத்தை அவளிடம் கூறினேன். 53நான் சுற்றிலும் திரும்பினேன். நான்..... காலை உணவு முடிந்தவுடனே, நான் என்னுடைய காசோலையின் கையிருப்பு எவ்வளவு இருக்கும் என்று பார்க்கும்படிக்கு சென்றேன், அது சென்ற வருடம் நடந்த கூட்டங்களில் செலவழிக்கப்பட்ட, பணத்திற்காக கொடுக்கப்பட்ட காசோலைகள் வங்கிக்கு எத்தனை வந்திருக்கிறது என்று பார்க்க. நான் வங்கிக்கு சென்றேன், அவர்கள் அவைகளை எனக்காக ஆயத்தமாக்கி வைத்திருந்தனர். நான் அங்கு சென்றேன், எல்லா காசாளர்களும், “ஹலோ, சகோதரன் பிரான்ஹாம்'' என்றனர். நான், “ஹலோ! ஹலோ! ஹலோ!' என்றேன். நான் திரும்பிச் சென்று என்னுடைய காரியங்களை எடுத்துக் கொண்டு வெளியேறத் தொடங்கினேன். நான் இதைப்போன்று வெளியே நடக்கத் தொடங்கினேன், ஏதோவொன்று, “நில்!” என்றது. நான் அதைக்குறித்து சிந்தித்தேன், சில சமயங்களில் ஒரு உணர்ச்சியின் விளைவை நீங்கள் எப்படி பெறுவீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். “நில்!” ஜனங்களை நோக்கிப் பார்த்தவாறே காத்திருந்தேன். யாருமே என்னை நோக்கிப்பார்க்கவில்லை. நான், “ தேவனாகிய கர்த்தாவே, நீர் என்னிடம் என்ன செய்ய சொல்லுகிறீர்?” என்று கேட்டேன். நான் இதைப்போன்று அந்த மூலையில் பின்னோக்கிச் சென்று, என்னுடைய காசோலைகள் இருந்த அந்த சிறு பெட்டியை என்னுடைய அக்குளில் வைத்துக்கொண்டு ஒரு வகையாக காத்திருந்தேன். நான், “நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் சொல்லுகிறீர்?” என்று நினைத்தேன். “பாப் டென்னிஸனைப் பார்” என்றது. 54நான், “இப்பொழுது, அது சரியாக பாப் டென்னிஸன் தான் '' என்று நினைத்தேன். நான் நோக்கிப் பார்த்தேன், அவர் இதைப்போன்று தன்னுடைய தலையை தாழ்த்தினவாறு நின்று கொண்டிருந்தார். நான் பாப் அவர்களை உண்மையாகவே நன்கு அறிவேன். அவர் அங்கே ஒரு வங்கி காசாளராக இருந்தார். மேலும்.... நான், “ நல்லது, அது அப்படியே....' என்றேன். ஆனால் அது அவ்விதமில்லை. அது தேவனாக இருந்தது...... நான் ஒரு நிமிடம் நின்றேன். நான் நடந்து சென்று, ”காலை வணக்கம், பாபி“ என்றேன். அவர், “ஹலோ, சகோதரன் பிரான்ஹாம்!” என்றார். அவர் என்னிடம், “கூறுங்கள், மார்ஜி மார்கன் அன்றொரு நாளில் இங்கே இருந்தாள். அவள் புற்றுநோயிலிருந்து சுகம் பெற்றாள் என்று நான் நம்புகிறேன்” என்றார். நான், 'ஆம், ஐயா. பாபி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?“ என்றேன். அவருடைய கன்னங்களில் கண்ணீர் வடிந்தது. அவர் என்னிடம், “சகோதரன் பிரான்ஹாம், நான் - நான் உங்களிடம் கூறுவதற்கு என்னிடம் ஏதோவொன்று உள்ளது. நீங்கள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார். நான், “நல்லது, பாபி, மேற்கொண்டு கூறுங்கள்!” என்றேன். அவர், “ஓ, என்னுடைய ஜனங்களில் அனேகர் புற்று நோயால் மரித்து விட்டனர். அவர்கள் கொண்டிருந்த ஒவ்வொரு அறிகுறிகளையும் நான் கொண்டிருக்கிறேன். கடந்த சில தினங்களாக மரணத்தைக் குறித்து கவலை கொண்டுள்ளேன். பில்லி, நீங்கள் எந்த தொல்லைக்கும் காரணமாக நான் விரும்பவில்லை, ஆனால் இன்று காலை மூன்று மணிக்கு நான் அறையில் எழுந்தேன். நான் ஒரு சொப்பனம் கண்டேன், அதை நான் உங்களிடம் கூறியாக வேண்டும்” என்று கூறினார். நான், “இன்று காலை மூன்று மணிக்கு அவர் என்னை எழுப்பினார்” என்றேன். அவர் என்னுடைய கரத்தைப் பற்றிப்பிடித்தார். அதுவே அந்த புற்றுநோயின் கடைசிநேரமாயிருந்தது. அதற்கு மேலும் எந்த அறிகுறியும் அவரிடம் காணப்படவில்லை... நல்லது, இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு முன்னால் நான் வீட்டிற்குச் சென்றபோது, நான் அவரிடம், “பாபி, நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் இப்பொழுது ஒரு வித்தியாசமான நபராயிருக்கிறேன் என்று உங்களிடம் சொல்லுகிறேன்” என்றார். தேவன் இன்னும் ஆண்டு அரசாளுகிறார். அவர் யெகோவாவாக இருக்கிறார், அவரைப் போல் வேறு யாருமில்லை. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார், “ஆமென்” என்கின்றனர்- ஆசிரியர்). 55சில வேதவசனங்களை நாம் வாசிக்கலாம். நான் உங்களை நேசிக்கிறேன். முழு இரவும் சாட்சி கூற முடியும், ஆனால் நான் துரிதமாக பரி.யோவான் 4-ம் அதிகாரத்திலிருந்து வாசிக்கவேண்டியதாயிருக்கிறது. பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விபட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும் படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்க மாட்டீர்கள் என்றார். அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்கு முன்னே வரவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். அப்பொழுது எந்த மணி நேரத்தில் அவனுக்கு குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள். உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம். யோவான் 4:46-54 56இயேசு வார்த்தையைப் பேசினார். அவர் வந்து தம்முடைய கரத்தை அவன் மீது வைத்து, ஜெபிக்கும்படி அந்த தகப்பன் விரும்பினான். இயேசு, “நீ போகலாம்; உன்னுடைய குமாரன் பிழைத்திருக்கிறான்” என்றார். தகப்பனும் இயேசு சொன்னதை விசுவாசித்தான். இப்பொழுது, அவன் விசுவாசியாமல் இருந்திருந்தால்? அது சம்பவித்திருக்காது. அவன் விசுவாசித்தான். இன்றிரவும் இயேசு சொன்னதை நாம் விசுவாசிப்போமாக. நீங்கள் விசுவாசிப்பீர்களா? கவனியுங்கள். மாற்கு 11:24-ல் இயேசு இவ்விதம் கூறியுள்ளார். “ஆதலால் நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 57வேதவசனத்தின் ஒழுங்கை கவனியுங்கள். இப்பொழுது விசுவாசியுங்கள்; நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கும் போது அதைப் பெற்றுக்கொள்வீர்கள்; உங்களுக்கு வெளிப்பட தெரியும் பொருள் (evidence) கிடையாது; நீங்கள் அதை பெற்றுவிட்டீர்கள் என்று காண்பிக்க அங்கு எதுவுமில்லை, ஆனால் நீங்கள் அதைப் பெற்றுவிட்டீர்கள் என்று விசுவாசியுங்கள். அப்படியே அதை விசுவாசித்து கொண்டேயிருங்கள், அது உங்களுக்கு கொடுக்கப்படும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு மகிமையான கூட்டத்திற்காக நாம் அவரிடம் விண்ணப்பம் செய்யலாம். அந்தபடியே விசுவாசிகளாகிய நீங்கள் எல்லாரும் என்னுடன் ஒன்று சேருங்கள். நீங்கள் யாரென்பது ஒரு பொருட்டல்ல. நீங்கள் தேவனுடைய கோட்டை தாண்டியிருந்தால், அவர் உங்களை சிட்சிப்பார். தாவீது அவருடைய இருதயத்துக்கேற்ற ஒரு மனிதனாக இருந்தான், ஆனால் தாவீது தான் விதைத்ததை அவனே அறுத்தான். நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 58எங்கள் பரலோக பிதாவே, நாங்கள் இந்த ஒரு காரியத்தை அறிந்துகொண்டதற்காக இன்றிரவு உமக்கு நன்றி செலுத்துகிறோம்: அதாவது பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு இங்கே ஜீவித்து, எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை உறுதிபடுத்தி, என்ன சம்பவிக்கும் என்று அவர் சொன்னாரோ அந்த காரியங்களை சம்பவிக்கப்பண்ணுகிறார் என்பதை. அன்புள்ள தேவனே, ஜனங்களின் விசுவாசத்திற்கு நான் பொறுப்பாளியாக இருக்க முடியாது. உம்முடைய வார்த்தையை பிரசங்கிப்பதும், சத்தியமென்று நான் அறிந்துள்ள அந்த காரியங்களை குறித்து சாட்சி கூறுவதும் என்னுடைய பொறுப்பாக உள்ளது. நீர் - நீர் அறிந்திருக்கிறீர். ஆப்பிரிக்க விவகாரத்தைக் குறித்து நீர் அறிவீர். பிதாவே, இங்கே இன்றிரவு இந்த மேடையின் மேல் உள்ள பிரசங்க பீடத்தில் நான் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நீர் என்னுடன் இருந்து ஆப்பிரிக்காவிலோ அல்லது இந்தியாவிலோ எனக்கு உதவி செய்யப்போகும் ஒரு வேளையானது சீக்கிரமாக வருகிறது என நான் இன்றிரவு விசுவாசிக்கிறேன். இப்பொழுது என்னருகில் இரும். இன்றிரவு என்னுடன் நில்லும். என்னை ஆசீர்வதித்து என்மேல் உம்முடைய இரக்கத்தின் அன்பு சிறகுகளை வைத்து பாதுகாத்து, எங்களுடைய பாவங்களுக்காகவும் மீறுதல்களுக்காகவும் ஒரு பரிகாரத்தை உண்டாக்கி, எல்லா காரியங்களையும் எங்களுக்கு மன்னித்து, உமக்காக ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்யும். இன்றிரவு கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொரு பாவியையும் மன்னித்தருளும். எல்லா சந்தேகத்தையும் வெளியே எடுத்துப் போடும். தேவனுடைய வல்லமையானது இன்றிரவு எல்லாவற்றையும் விட மகத்தானதாயிருந்து, எல்லா அவிசுவாசத்திற்கும் மேலாக உயர்ந்த முக்கியத்துவம் பெற்றதாக சத்துருவை விரட்டியடிப்பதாக, எங்களை உம்முடைய ஆவியால் நிரப்பி வியாதியஸ்தரை சுகமாக்கி, இழக்கப்பட்டவர்களை இரட்சியும். இயேசுவின் நாமத்தில் நான் கேட்கிறேன், ஆமென். 59ஜெப அட்டை W, ஜெப அட்டைகளைக் கொண்டிருப்பவர்கள், உங்கள் ஜெப அட்டைகளைத் திருப்பிப் பாருங்கள். நீங்கள் சுகமடைய அவைகள் எதுவும் செய்வதில்லை. இங்கே ஒன்றாக கூடியிருக்கும் இந்த கூட்டத்தினரில் தேவன் இன்றிரவு வெளிப்படுவார் என்று நீங்கள் என்னுடன் விசுவாசிப்பீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜனங்கள் சுகமடையட்டும். நீங்கள் சுகமடைவதிலிருந்து உங்களைத் தடை செய்கிற ஒரேயொரு காரியம் மட்டுமே உள்ளது. நான் வேதாகமத்தை சரியாக வாசித்தால், ஏராளமான ஜனங்கள் அந்த வேதவாக்கியத்தில் என்னுடன் இணங்குவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்). நாம் சுகமடைவதிலிருந்து நம்மைத் தடுக்கிற ஒரே காரியம் என்னவெனில் விசுவாச குறைவு தான். அதாவது நம்முடைய இருதயம் சரியாக இருக்குமானால் அவ்வளவு தான். அது சரியா ? அவர் நம்முடைய மீறுதல்களுக்காக காயப்பட்டார் என்றால், அவருடைய தழும்புகளால் சுகமானோம். கவனியுங்கள், ஒரு சமயம் என்னுடைய சபைக்கு ஒரு நபர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அவர் கூறுவார்.... நான், “கிறிஸ்தவர்களாகும்படி ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிறவர்கள் எழுந்து நில்லுங்கள் ” என்பேன். ஒவ்வொரு இரவும் அவர் எழுந்து நின்றுகொள்வார். சரி. அடுத்த இரவில், நான், ''கிறிஸ்தவர்களாக விரும்புகிறவர்கள் எல்லோரும், கிறிஸ்தவனாயிருக்கும்படிக்கு ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிறவர்கள் எழுந்து நில்லுங்கள்'' என்பேன். அந்த எழுப்புதலினூடாக அவர் எழுந்து நிற்பார். அதற்குப் பிறகு, அது மாதக்கணக்காக அவ்வாறிருக்கும், நான் மற்றொரு எழுப்புதலைக் கொண்டிருப்பேன், அவர் எழுந்து நிற்பார். இது நான் ஒரு பாப்டிஸ்ட் ஊழியக்காரனாக இருந்த போது. அவர் எழுந்து நின்று நினைவுகூரப்பட விரும்பினார். நான் தெருவில் அவரை சந்தித்து, “நீங்கள் இப்போது ஒரு கிறிஸ்தவர் தானே?” என்று கேட்டேன். “இல்லை, இல்லை. சகோதரன் பிரான்ஹாம் எனக்காக ஜெபியுங்கள்” “சரி” “நன்றி” 60அதே விதமாகவே நாட்கள் சென்றன. ஒரு இரவு நாங்கள் ஆராதனையைக் கொண்டிருந்தபோது, நான், “கிறிஸ்தவர்களாக விரும்புகிறவர்கள் எல்லோரும், ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிறவர்கள், எழுந்து நில்லுங்கள்” என்றேன். அவர் அங்கும் எழுந்து நின்றார். நான், “ஒரு நிமிடம் இங்கே வாருங்கள்'' என்றேன். அவர் நடந்து வந்தார். ” உங்களுடனான காரியம் என்ன?“ என்றேன். “எனக்குத் தெரியாது.” நான், “நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டேன். “ஆம், ஐயா.'' நான், ”நீங்கள் ஏன் ஒரு கிறிஸ்தவனாகவில்லை “ என்றேன். அவர், ”எனக்குத் தெரியாது'' என்றார். நான், “அங்கே சரியாக ஏதோவொன்று உங்களில், உங்களுடைய இருதயத்தில் உள்ளது, நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் ஏதோவொன்று நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருக்க விடவில்லை . அது சரியா?” என்றேன். அவர், “அது சரிதான்” என்றார். 61நான், “அதுதான் பிசாசு. அதாவது அவிசுவாசம். நீர் அதை விசுவாசிக்கிறீரா?” என்றேன். அவர், “ஆம், ஐயா” என்றார். நான், “நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கும்படி உங்களுக்கு மேலாக இருக்கும் அவிசுவாசத்தின் வல்லமையை தேவன் உடைக்கும்படிக்கு நான் அவரிடம் கேட்டால், அப்போது நீங்கள் கிறிஸ்தவனாகி விடுவீர்கள் என்று விசுவாசிப்பீர்களா?” என்றேன். அவர், “சரி, ஐயா” என்றார். சரியாக அவர் பெற்றுக்கொண்ட அந்த சமயத்தில் ....... அவர் திடீரென்று கூச்சலிட்டார். அவர் இதைப்போன்று மேலே எகிறி குதித்தார். அது போய்விட்டது. இன்று அந்த மனிதர் ஒரு தீவிர விசுவாசமான கிறிஸ்தவராக இருக்கிறார். அது என்ன? அது அவிசுவாசமான பிசாசாகும், அந்தத் தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வரவிடாமல் தடுக்கும் அந்தப் பழைய ஊடுருவி நுழையும் நிழல் போன்ற குட்டிப்பிசாசு. அதே காரியம் தான் சுகமாக்குதலிலும் உள்ளது. நீங்கள், “நல்லது, நான் நெடுங்காலமாக வியாதிப்பட்டுள்ளேன். நான் நெடுங்காலமாக ஊனமுற்றிருக்கிறேன். நான் இந்நிலையிலிருந்து முன்னேற்றமடைய இயலாது'' என்பீர்கள். ஓ, சரி, உங்களால் கூடும். இயேசு கிறிஸ்து, “நீங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது, நீங்கள் விரும்புவது எதுவோ அதைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்போது நீங்கள் அதைக் கொண்டிருப்பீர்கள்'' என்றார். நான் அதை விசுவாசிக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கவில்லையா? சரி. W, இப்பொழுது ஜெப அட்டைகளைப் பெற்றுக் கொள்வோம். சென்ற இரவு நாம் எங்கிருந்து அழைத்தோம்? எங்கிருந்து? ஐம்பது. சரி. இன்றிரவு அவைகளில் கடைசியை எடுத்துக்கொள்ளலாம். ஜெப அட்டை W-ல் எண் 85 முதல் 100 வரை எடுத்துக்கொள்வோம். அது வந்துகொண்டிருக்கிறது... நாம் அனேகமாக ஒரு கோடு போட்டு அதிலிருந்து அழைப்போம். சரி. ஜெப அட்டை 80, W-85-ஐ யார் வைத்துள்ளீர்கள், உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? உங்களது கரத்தை உயர்த்துங்கள். W-85, 86, 87, 88, 89, 90 லிருந்து 100 வரை. ஜெப அட்டை W-85-லிருந்து 100 வரை வரிசையாக இங்கே என்னுடைய வலப்பக்கத்தில் வந்து நில்லுங்கள், நாம்.... இப்பொழுது, அவர்களை நடத்திச் செல்பவர்களாகிய நீங்களும் மற்றவர்களும், அவர்கள் ஒவ்வொருவரும் அங்குள்ளனரா என பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் அங்கில்லையெனில், நான் அதை அறியும்படி என்னிடம் சொல்லுங்கள், நான் மீண்டும் வரிசையை அழைக்கிறேன். சரி. 62இப்பொழுது, சக்கர நாற்காலிகளில் இருப்பவர்களில் யாராவது ஜெப அட்டையைக் கொண்டிருந்தால், அவர்கள் இங்கே மேலே ஜெப வரிசையில் வரவேண்டிய அவசியமில்லை, அப்படியே உங்கள் கரத்தை உயர்த்துங்கள், அல்லது அந்த எண்ணைக் கொண்டிருக்கும் யாராவது ஒருவர் அந்த அட்டையை உயர்த்திப் பிடியுங்கள். அந்த எண் அழைக்கப்படும் போது, நீங்கள் வரிசையில் நிற்க வைக்கப்படும்போது, நகர்ந்து எனக்கு முன்பாக வரலாம். மேலும் நண்பர்களே, என்னால் உங்களை சுகமாக்க இயலாது. ஆனால் தேவன், தம்முடைய பராக்கிரமத்திலும் இரக்கத்திலும் வல்லவராய் இருந்து அவருக்கு சித்தமானால் நீங்கள் ஏன் சுகமாக முடியாமல் இருக்கிறது என்கிற காரணத்தை எனக்குத் தெரியப்படுத்துவார். பாருங்கள் ? காரணம்..... இப்போது நீங்கள் அதைப் பெற்றிருந்தால்.... விசுவாசம் மாத்திரமே உங்களை சுகமாக்க முடியும், உங்களுடைய சொந்த தனிப்பட்ட விசுவாசத்தில். ஒரு சுகமளிக்கும் வரம் என்பது என்னவாய் இருக்கின்றது என்று நீங்கள் காண்கிறீர்களா? சுகமளிக்கும் வரம் என்பது ஒருவரை சுகமாக்குவதற்கு வேறொருவருக்குள் இருக்கும் ஏதோ ஒன்றல்ல. ஜெபித்துக் கொள்ளப்பட்ட மனிதனுக்குள் அந்த அந்த சுகம் இருக்க வேண்டும். (மன்னிக்க வேண்டும்) அவனுக்குள் அந்த விசுவாசம் இருக்க வேண்டும். அது சரியா? சரி. 63இப்போது, அப்பா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீர் இன்றிரவு அந்த கக்கதண்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு, சாதாரணமாக வீட்டிற்கு நடந்து செல்ல முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீர் அப்படித்தான் நினைக்கிறீர் என்று நான் நம்புகிறேன். அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த அம்மா, உம்மை குறித்தென்ன? உம்மாலும் இன்றிரவு அங்கிருந்து எழுந்து வீட்டிற்குச் சென்று, சுகமாய் இருக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அங்கே காலில் இரும்புக் கம்பிகளை மாட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் அத்த சகோதரி, உம்மை குறித்தென்ன? அப்படியே அந்த வரிசையின் ஓரமாக உள்ள நீர். உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா? நீர் என்ன செய்ய வேண்டுமென்று நான் சொல்கிறேன். நீர் இப்படித் திரும்பி இந்த பக்கம் பார்த்து ஜெபித்தால், இல்லை. என்னைப் பார்த்து அல்ல. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நான் சொன்னது என்னவென்றால், பேதுரு சொன்னதைப் போல, “ எங்களை நோக்கிப் பார்.'' அவர்கள் மனிதர்களாய் இருந்தனர் . ” எங்களை நோக்கிப் பார்!“ அந்த முடவன் அவர்களிடம் ஏதாகிலும் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தான். அவன், “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை'' என்றான். பாருங்கள்? இப்போது, ”தேவன் என்னிடத்தில் கொடுப்பதை, நான் அப்படியே உங்களுக்குக் கொடுக்கிறேன்...... 64இப்போது அங்கே உள்ளவர்களில் எத்தனை பேர் இன்றிரவு.... பெற்றிருக்கிறீர்கள்? நல்லது, நான் அது போன்ற சில வியாதிகளை சொல்லி அழைக்க மாட்டேன், ஆனால் அந்த மோசமான வியாதிகளை உடையவர்களாயிருந்து, எந்த ஜெப அட்டையும் பெற்றுக்கொள்ளாமல் தேவன் இந்த இரவிலே உங்களை குணமாக்கும்படி விரும்புகிறவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எல்லாவிதமான வியாதிகளையும் உடையவர்கள். உங்கள் கைகளை உயர்த்தி, “நான்-நான் - நான் - நான் ஒரு...?... நான் -நான்-நான் ஒரு” என்று சொல்லுங்கள்... பாருங்கள்? ....... அது சரி. பார்ப்பதற்கு இங்கே இருக்கிற, சரியாக இங்கே இருக்கிற, இந்த மூன்று வரிசைகளிலும் பெரும்பாலும் வியாதியஸ்தர்களே நின்று கொண்டிருப்பதைப் போல் காணப்படுகிறது. சரி. சரி. நீங்கள் ஜெபிக்க ஆரம்பியுங்கள். 65மீதியாயிருப்பவர்களாகிய நீங்கள் நன்றாக ஆரோக்கியமாக இருப்பவர்கள், நீங்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள். நான் நம்புகிறேன். நீங்கள் வியாதியஸ்தராயிருந்து உங்கள் கரத்தை உயர்த்திப்பிடிப்பீர்கள் என்றால், அவர்கள் உங்களுக்காக ஜெபிப்பார்கள். நீங்கள் யாவரும் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து உங்கள் தப்பிதங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டுக் கொள்ளலாம். அது சரிதானே? மேலும் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கலாம்.. நீங்கள் சுகமாகத்தக்கதாக... பில்லி, எல்லா அட்டைகளும் உன்னிடம் திரும்பி வந்துவிட்டனவா? ஊகூம்? சரி. இன்னுமாக அவனிடம் திரும்பி வராத சில அட்டைகள் உள்ளன. இப்போது அது 85, W85 லிருந்து... (ஒலிநாடாவில் காலியிடம்-ஆசிரியர்) என் பிதா எனக்கு தந்தவைகளில் ஒன்றையும்..... வியாதிகள் சுகமாவதாக, குருடர் பார்வையடைவார்களாக, செவிடர் கேட்பார்களாக, ஊமையர் பேசுவார்களாக, சப்பாணிகள் நடப்பார்களாக. கர்த்தாவே, நாங்கள் உம்மை விசுவாசிக்க இதெல்லாம் இருக்க வேண்டியதேயில்லை, கர்த்தாவே, எப்படியாகிலும் நாங்கள் அவற்றை விசுவாசிக்கிறோம். ஆனால் இன்றிரவு அது உம்முடைய மகத்தானதாய் இருக்குமானால், இந்த சிலாக்கியங்களையும் ஆசீர்வாதங்களையும் உம்முடைய ஊழியக்காரனுடைய ஜெபத்தைக் கேட்டு தந்தருளும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். (ஆர்கன் இசைக்கருவியின் சத்தம் மிகவும் அதிகமாக இருப்பதால் சகோ.பிரான்ஹாம் சொல்வதை தெளிவாக கேட்க முடியவில்லை - ஆசிரியர்) 66இதை கர்த்தரின் நாமத்தில் கேட்கிறேன். ஒவ்வெருவரும் அப்படியே ஜெபத்தில் இருங்கள், அப்படியே .......... ஒரு சில....?... சற்று மனத்தாங்கலாய் இருக்கும். நீங்கள் உங்கள் பிள்ளைகளை உங்கள் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளை அப்பால் செல்ல விட்டுவிடாதீர்கள், விசேஷமாக காக்காய் வலிப்பு சமாச்சாரத்தில். பாருங்கள்?...?... இப்போது நினைவில் கொள்ளுங்கள், குறை கூறுபவர்களுக்கு நான் பொறுப்பில்லை, கூட்டத்தின் இந்த பக்கத்தில் அமர்ந்திருக்கும் அவிசுவாசிகளுக்கு. நான் பொறுப்பாக மாட்டேன்... இந்த முறை, இந்த கூட்டத்திற்கு வெளியே இருக்கிற நீங்கள் இந்த முறை ஒரு குறை கூறுபவனாகவோ, அவிசுவாசியாகவோ இருக்கலாம். கர்த்தருடைய நாமத்தில், நான் மறுபடியும் கூறுகிறேன். நான் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டேன். நான் ஒரு விசுவாசிக்கு வேண்டுமானால் பொறுப்பாளியாய் இருப்பேன். ஆனால் ஒரு அவிசுவாசி அல்லது குறைகூறுபவனுக்கல்ல. சரி,... ஒவ்வொருவரும்... நாம் நம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்வோம்; இப்போது நெருக்கித் தள்ளாதீர்கள். பாருங்கள்? இதெல்லாம் ... நாம் அமைதியாயிருப்போம், ஜெபித்துக் கொண்டிருங்கள். 67யாருக்குத் தெரியும், ஒருவேளை கர்த்தர் இன்றிரவு உங்களை சந்திக்கக் கூடும்? இது உங்களுடைய நேரமாயிருக்கலாம். சரி. இங்கே இவர்களெல்லாம் என்னுடைய சகோதரர்கள். இந்த ஒலிவாங்கியை (mike) இங்கே கொண்டுவரப் போகிறேன், அப்போது தானே நான் உங்களிடம் கொஞ்சம் பேச முடியும். நீங்கள் - நீங்கள் முதல் வியாதியஸ்தராயிருக்கிறீர்கள், அது சில நேரங்களில், நான் ஜெபவரிசையை ஆரம்பிக்கிற காரணம் என்னவென்றால் - அப்போது என்மேல் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளும்படியாக நான் அவர்களிடத்தில் போதிய அளவு பேச முடியுமானால்.... பாருங்கள்? செய்தி அளித்த பிறகு, அது வேறு அபிஷேகம், பிறகு இது-இது வேறு அபிஷேகம். மேலும் நான் என்ன பேசப் போகிறேன் என்பதை அறியும் முன் அதை நான் எனக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அது நானாகவே செய்கிற எதுவுமல்ல. அது முற்றிலுமாக தேவனாலேயே. பாருங்கள்? மேலும் இப்போது, நீங்கள் ஒரு விசுவாசி. நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அதைக்குறித்து நான் நிச்சய முடையவனாயிருக்கிறேன். பாருங்கள்? நீங்கள் உத்தமமாயிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் தேவன் உங்களுக்கு உதவி செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன்...... உங்கள் தொல்லையில். 68இப்போது நான் உங்களை அறியேன். உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. இப்போது நீங்கள் இன்று பிற்பகல் தான் இங்கு வந்தீர்கள், அந்த - அந்த தம்பி உங்களுக்கு ஒரு ஜெப அட்டையை தந்தார், நீங்கள் அதன் மீது கவனித்தீர்கள்; அதன்மீது எண் போடப்பட்டிருந்தது. நீங்கள் உங்கள் பெயரையும் மற்றதையும் அதன் மேல் எழுதினீர்கள். பிறகு இன்று உங்கள் பெயர் வாசிக்கப்பட்டபோது, நீங்கள் அப்படியே..... அவ்வளவு தான் காரியம். நீங்கள் போகலாம். அங்கே காரியம் அவ்வளவு தான். நீங்கள் வெறுமனே ஒரு அன்னியர், நானும் ஒரு அன்னியன். இப்போது இங்கே - எல்லா காரியங்களையும் அறிந்த பரலோகத்தின் தேவன் இருக்கிறார். அவருக்கு எதுவுமே இரகசியம் இல்லை. அவர் தம்முடைய ஊழியக்காரராகிய தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு தம்முடைய இரகசியங்களைத் தெரியப்பண்ணி அதை வெளிப்படுத்துகிறார். 69நீங்கள் தானியேலை நினைவுகூருங்கள். அவன் எப்படி இராஜாவின் சொப்பனத்தை விளங்கப் பண்ணினான் என்று. எப்படி இயேசு நாத்தான் வேல் தன்னிடத்தில் வருவதை அறிந்து, அவனிடத்தில் சொன்னார், அவன் தன்னிடத்தில் வருவதற்கு முன் ஊக்கமாய் ஜெபித்துக் கொண்டிருந்தான் என்று. அதே இயேசு இன்றும் ஜீவிக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அவர் ஜீவிக்கிறார்... சரி. நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், நான் அவருடைய தீர்க்கதரிசியாய் இருக்கிறதினால், எனக்கு இருக்கிற வேறெந்த தகுதியினாலும் அல்ல, ஆனால் அவருடைய அனந்த கிருபையினால் நான் அவருக்காக இந்த ஊழியத்தை செய்வேன் என்பதை உலகத்தோற்றத்துக்கு முன்னமே கண்டு அதற்கென்று என்னை நிமயமித்தார்.... இப்போது நான் இதை எனக்காக செய்கிறதில்லை . சரி. நான் இப்படி உங்களிடத்தில் பேசிக்கொண்டிருப்பது இதற்காகத் தான். அதாவது - அவர் அன்று அந்த கிணற்றண்டை இருந்த ஸ்திரீக்கு செய்தது போல, நானும் ஒருவேளை உம்முடைய ஆவியைப் பிடிக்க முடியுமா....?... அதன் மூலம் உன்னுடைய தொல்லை என்ன என்று அறியும்படியாக. பாருங்கள்? 70இப்போது, அவர் கிருபை அளித்து அதை செய்வாரென்று நான் நம்புகிறேன். ஒருவேளை அவர் செய்யவில்லையென்றால், நல்லது, எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் உன்னுடைய- உன்னுடைய தொல்லை என்னவென்றால் அது உன் பக்கவாட்டில் உள்ளது. அது சரிதானே? அது சரியென்றால் உன் கைகளை உயர்த்து. நீ வலியினால் உன் பக்கம் முழுவதையும் பிடித்துக் கொண்டிருப்பதை காண்கிறேன். அது ஒரு விபத்தினால் வந்தது. ஏதோ ஒன்று விழுந்து, அது ஒரு சாரம். அது சரியா? ஆம், ஐயா. அது என்ன செய்ததென்றால் உன்னை ஒரு உலுக்கு உலுக்கி, உன் பக்கவாட்டிலுள்ள திசுக்களை கிழித்து விட்டது. அவையெல்லாம் உண்மையா, ஐயா? நான் சொன்னதெல்லாம் சரிதானா? அப்படியானால் கூட்டத்தினர் பக்கமாக திரும்புங்கள், அவர்களெல்லாரும் காணத்தக்கதாக. அது உண்மையா? 71இப்போது இந்த மனிதர், இவரை எனக்குத் தெரியாது. இப்போது ஒலிவாங்கியில் நீர் கேட்கும்படியாக, அப்போது நீங்கள் சரியாக கேட்க முடியும்..... (“அது சரிதான்” என்கிறார் அந்த மனிதர் - ஆசிரியர்) அது உண்மையா? இப்போது அந்த தரிசனம் போய் விட்டது. பாருங்கள்? இப்போது உங்களுக்கு என் சத்தம் கேட்டது, கேட்டதா? ஆனால் அது நானல்ல; அது தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டதும், இப்போது நம் மத்தியில் இருப்பவரும், நீங்கள் அந்த படத்தில் பார்த்ததும், நாங்கள் நேற்றிரவு சொன்னவரும், எல்லாவற்றையும் அறிந்திருப்பவரும் ஆகிய அவர்தான் அது. இப்போது சகோதரனே, இங்கே வாரும். இப்போது அவர் என்னை அங்கே சந்தித்த போது, அவர் கூறினார்.... நான் அவரிடம் கூறினேன், எனக்கு போதிய அளவு படிப்போ வேறெதுவோ இல்லை....... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்) 72அது - அது அந்த குடல் சம்பந்தமானது இல்லையா? அல்லது பெருங்குடலில் உள்ள ஒரு துவாரம்? அப்படித்தானே... அதிலே கட்டிகள் இருக்கின்றன. அது சரியா? பெருங்குடல் வகையராவில் கட்டிகள். ஊ-ஊம். நீர் ஒரு அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாய் இருக்கிறீர். நீர் அதை தள்ளிப் போட்டு வந்தீர். அறுவை சிகிச்சை கெடுவும் முடிந்து விட்டது, இல்லையா? ஆம், ஐயா . நீர் அதை தள்ளிப் போட்டு, நான் உமக்காக ஜெபிக்கும்வரை காத்திருந்தீர். அது சரிதானே? இங்கே வாரும். சர்வ வல்ல தேவனே, நீர் இங்கே இருக்கிறீர். எந்தவொரு சந்தேகத்தின் நிழலுக்கும் இடமில்லாமல், நீர் இப்போதே இந்த மேடை அருகே இருக்கிறீர். இந்த ஸ்திரீயின் நிலைமையை நீர் அறிந்திருக்கிறீர். கர்த்தாவே, நான் இவள் மீது கையை வைக்கிறேன். மருத்துவர் இவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முயன்று கொண்டிருக்கிறார். இருப்பினும், நீர் அவளை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும்... தேவனே, நீர் இந்த ஸ்திரீயை சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இந்த கட்டி இவளை விட்டு நீங்கி, இவள் சுகமாய் இருப்பாளாக. உம்முடைய நேசப்பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இதைக் கேட்கிறேன். ஆமென். என் துணிச்சலான சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து மகிழ்ச்சியோடும், களிகூருதலோடும் கடந்து செல். 73வாருங்கள், சகோதரனே. பாவம் அந்த சிறிய பெண், என்னே விசுவாசம் அவளுக்கு ! அவளுடைய ஜெபத்திற்கு தேவன் பதிலளிக்க மாட்டார் என்பதை நான் எவ்விதத்திலும் காணவில்லை. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. நீ ஒரு உத்தமமான கிறிஸ்தவள் என்று நான் நம்புகிறேன். நீர் இதற்கு முன்னே என்னுடைய கூட்டத்தில் இருந்திருக்கிறீர். அது சரிதானே? சமீபத்தில் கூட, நீ இல்லையா?...?... இருந்தாலும் நான் உன்னைப் பார்க்கவில்லை. ஆனால் இப்போது நான் உன்னை காண்கிறேன்; நீ ஜெப வரிசையில் நின்றுகொண்டிருக்கிறாய். நீ கிட்டத்தட்ட அழைக்கப்படுவதற்கு அருகிலிருந்தாய். அது சரிதானே? நம்முடைய பரமபிதாவுக்கு முன்பாக யாதொரு இரகசியமும் இல்லை. இப்போது நன்றாக இருப்பதாக உணருகிறீரா, ஐயா? இப்போது இங்கே பாரும். நான் அப்படித்தான் நினைத்தேன். நீர் உம்முடைய நரம்பு தளர்ச்சியினின்று நீங்கி, சுகமாய் இருக்கப் போகிறீர். ஆசீர்வாதங்கள் இன்னுமாக உம்மீது இருக்கின்றன. ஆகவே நீர் கவலைப்பட வேண்டாம். 74ஒருவேளை ஆசீர்வாதங்கள் உம்மேல் ஊற்றப்படுமானால், அதை உறுதியாக பற்றிக்கொள்ளும். சில நேரங்களில் அது உம்மை வந்தடையும் முன் நாட்கள் செல்லலாம். தானியேலும் கூட ஒரு நாளில் ஜெபித்தான். இருபத்தொரு நாட்களாக தூதன் தானியேலிடம் வந்து சேரவில்லை . அது சரியா? ஸ்திரீகளும் புருஷர்களும் வாரக்கணக்கில் காத்திருந்ததை நான் கண்டிருக்கிறேன். மேலும் முதலாவது காரியம் உனக்குத் தெரியுமா? திடீரென்று அது சம்பவித்தது. தூதன் பக்கத்து வீடுகள் வழியாக புகுந்து வருகிறார். அது எங்கே இருக்கிறது என்று அவருக்குத் தெரியும். “நீங்கள் பூலோகத்தில் கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூலோகத்தில் கட்டவிழ்ப்பது எதுவோ , நானும் அதை பரலோகத்திலே கட்டவிழ்ப்பேன்.'' அது சரியா? அதுதான் அவருடைய இராஜாதிபத்யம். 75அம்மையீர், என்னை மன்னியுங்கள். நான் அந்த பெண்ணின்பால் வெகுவாக கவரப்பட்டேன். சரி. நீர் பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியமாக இருக்கிறீர். நீர் விசுவாசிக்கிறீரா? இயேசு கிறிஸ்து உம்மை சுகமாக்குவாரென்று நீர் விசுவாசிக்கிறீரா? நான் அவருடைய தீர்க்கதரிசியாய் இருக்கிறேனென்று நீர் விசுவாசிக்கிறீரா? உம்முடைய முழு இருதயத்தோடும்? இப்போது பாருங்கள். அந்த பெண்மணிக்கு இருந்ததற்கும் உனக்கு இருப்பதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. உனக்கும் கூட ஒரு கட்டி இருக்கிறது. அது சரிதானே? அதன் சோதனை முடிவு. ஆனால் உனக்கிருக்கிற கட்டி அது தலையில் இருக்கிறது. அது சரிதானே ? நீ விசுவாசிக்கிறாயா? இங்கே வாருங்கள், சகோதரியே. எங்கள் பரலோகப் பிதாவே, இந்தப் பிசாசு இவளுடைய உயிரையே பலி வாங்கிடும் என்பதை அறிந்தவனாய், அவளுக்காக இரக்கத்தை நான் கேட்கிறேன். ஓ, தேவனே, உம்முடைய ஆவியானவர் இப்போது அருகில் வருவாராக. கர்த்தாவே, இவளை சுகமாக்கும். அது இவளை விட்டு நீங்குவதாக. அவள் முற்றிலும் சுகமடைவாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமது அடியான் வேண்டிக்கொள்கிறேன். 76சரி, சரி. அன்புள்ள இயேசுவே, இந்த சிறு பிள்ளையை நீர் சுகமாக்க வேண்டும் என்று உமது அருமையான, பரிசுத்தமான நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். கர்த்தாவே, இந்தக் கண்களை நேராக்கும். இரக்கமுள்ள தேவனே, உம்முடைய ஆவி இப்பொழுதே இவள் மேல் மென்மையாக வந்திறங்குவதாக. செய்யப்பட வேண்டிய அந்த மகத்தான அறுவை சிகிச்சை அது இப்போது செய்யப்படுவதாக, பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்வாராக. தேவனே, ஐயோ, பாவம், இந்த சிறு பிள்ளை அது விசுவாசம் கொள்ள முடியாது. ஆகவே, நாங்கள் தான் அவளுக்காக விசுவாசத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும், ஓ , தேவனே, உம்மிடத்தில் அன்புகூர்ந்து, என் முழு இருதயத்தோடும் அனேக , அனேக வருடங்களுக்கு முன்பாக மரித்து அக்கரையிலே அங்கே வீற்றிருக்கும் எனது சிறிய மகளை மனதிலே நினைக்கிறேன். நீர் இரக்கம் உடையவராய் இருந்து இந்த சிறு பிள்ளையை சுகமாக்குவீரா? ஏய் பிசாசே, இந்தப் பிஞ்சு குழந்தையின் கண்களை குறுக்கிடச் செய்தவனே, விசுவாசம் கொள்ள முடியாத பிஞ்சு குழந்தை இது. ஆனால் நாங்கள் அவளுக்காக விசுவாசம் கொள்கிறோம். இன்றைக்கு உன்னை ஒண்டிக்கு ஒண்டி சவாலுக்கு அழைக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பிள்ளையை விட்டுப் போய்விடு. போய் சில நிமிடங்களில், உங்கள் தலைகளைத் தாழ்த்தினவாறே காத்திருங்கள். உமக்கு நன்றி, பிதாவே. 77குழந்தை இவ்விதமாகத்தான் பிறந்ததா? சரி, உம்முடைய பிள்ளை மிகவும் நன்றாகவே இருக்கிறது. சரி. சுற்றிலுமிருக்கிற ஜனங்களைப் பார். பார் என்னுடைய கை எப்படி....?.... என்னுடைய விரலையே பார். இதை பார்..... இப்பொழுது என் விரலைப் பார். என் முகத்தைப் பார்த்துக்கொண்டே, இப்போது பின்னால் திரும்பிப் பார், இந்த பக்கம். இப்பொழுது அந்த சிறு கண்களை திருப்பி...?... என்னுடைய கண்களைப் பார்....... மேலே நோக்கி என்னைப் பார். அது மிகவும் கச்சிதமாக சரியாகி விட்டது..... “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு ஜெயத்தைக் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக'' என்று கூறுவோம். தேவனுடைய மகத்தான நீடிய இரக்கம் நம் ஒவ்வொருவருக்கும் கிட்டுவதாக. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விவாசிக்கிறவர்களுக்கு சகலமும் கூடும். 78அந்த பெண்மணியை அழைத்து வாருங்கள். எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? முழு இருதயத்தோடும்..... சரி, இப்போது, நீர் இந்தப் பக்கமாக பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நல்லது, நீங்கள் அங்கே கொண்டிருந்த உணர்ச்சிகளை நான் வெகுவாக ரசித்தேன். “அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார்.'' அவர் நம்முடைய இருதயங்களுக்குள்ளாக ஜீவிக்கிறார். எம்மாவுக்குப் போகிற வழியில் ஒரு நாள், இரண்டு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அவர்கள், ஒரு மனிதர் திடீரென்று தோன்றினார், மிகவும் ஒரு சாதாரண மனிதர், வித்தியாசமான விதத்தில் எந்தவொரு ஆசாரிய உடையும் உடுத்தியிருக்கவில்லை. அவர் ஒரு மனிதன், சாதாரண உடையில் இருந்தார், நடந்து வந்தார் ... அந்த நாட்களிலே. நடந்து கொண்டே அவர்களோடு பேச ஆரம்பித்தார். “ஏன் விடாய்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் கூறினர், “எது, நசரேயனாகிய இயேசுவை குறித்த காரியங்களை நீர் கேள்விப்படவில்லையா? நீர் அந்நியரோ? அவர் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி என்றும் இஸ்ரவேலுக்கு இராஜாவாயிருப்பார் என்றும் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம், ஆனால் அவரை கொலை செய்து விட்டார்கள். அவர் மரித்து விட்டார், அவரை அடக்கமும் செய்து விட்டார்கள். எல்லாம் பிரச்சனையாகி விட்டது...'' 79குழந்தையோடு இருக்கும் அந்த வாலிபப் பெண்மணி, நீர் இந்த பக்கமாகப் பாரும். உம்முடைய குழந்தையிடத்தில் தான் உமக்குப் பிரச்சனை, அப்படித்தானே? இப்படி என்னைப் பாருங்கள். நான் தேவனுடைய தீர்க்கதரிசியாய் இருக்கிறேன் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ ஒரு பாவியில்லையா, வாலிபப் பெண்ணே நீ? அது சரியென்றால், உன் கையை உயர்த்து. உன்னுடைய - உன்னுடைய கர்ப்பத்தின் கனியை உன்னுடைய கைகளில் ஏந்திக்கொண்டு நீ நின்று கொண்டிருக்கிற இடத்தில் தானே, இயேசுவை உன் சொந்த இரட்சகராக நீ ஏற்றுக்கொள்கிறாயா? நீ செய்வாயா? உன் குழந்தைக்கு உடம்பெல்லாம் சூட்டுக் கொப்புளங்கள், இல்லையா? அதுதான் .... அது சரியா? இப்போது நீ வீட்டுக்குச் செல்லலாம்; குழந்தை சுகமாகப் போகிறது. ஏதாகிலும் ஒரு நல்ல, பரிசுத்த ஆவி உள்ள சபையை சேர்ந்து கொண்டு, தேவ ஆவியினால் நிரப்பப்பட்டவளாயிரு . அப்பொழுது தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். உன் குழந்தையை நீ வீட்டிற்கு எடுத்துச் செல். அது இப்போது குணமடையப் போகிறது. குழந்தை சுகமாகப் போகிறது. கவலைப்படாதே. சிறு பெண்ணே , உன்னுடைய மீதியான வாழ்நாட்களில் தேவனுக்காக சேவை செய். நீ அவரை நேசிக்கிறாயா? அப்படியானால் சாட்சியாக ஜனங்கள் பார்க்கும்படி உன் கையை அசைத்துக்காட்டு. ஒருநாளில் நான் காணாமற்போனேன், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டேன், குருடனாயிருந்தேன், ஆனால் இப்போதோ காண்கிறேன். 80ஸ்திரீயே, நீ வலிப்பு வியாதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். நீண்ட நாட்களாக இந்த தொல்லை உனக்கு உண்டாயிருக்கிறது. உனக்கு வரிசையாக அறுவை சிகிச்சைகள் இருந்தன. வீட்டிலும் உனக்கு தாங்கமுடியாத உபத்திரவங்கள், அது உயரமாக வளர்ந்த உன் புருஷனிடமிருந்து. அது சரியா? சரி. வீட்டிற்குப் போய், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இயேசு கிறிஸ்து என்னை சுகமாக்குகிறார் என்று சொல்?...'' “கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக” என்று சொல்வோம். சரி. பெண்ணே , இங்கே வா. நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? ஒரு காலை வேளையில் நீ உன் படுக்கையை விட்டு நகர முடியாமல் அவதிப்படுகிறதைக் காண்கிறேன். உன் முதுகில் பிடிப்பு. உனக்கு முதுகுவலி தொல்லை இருக்கிறது. அது சரியா ? நீ என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா? வீட்டிற்கு சென்று அவருடைய நாமத்தில் சுகமாயிரு...?... தேவன் அந்த பிடிப்பை சுகமாக்கப் போகிறார்......... சரி. எது வேண்டுமானாலும் செய்யப்பட முடியும். விசுவாசம் கொள்ளுங்கள். 81ஐயா, வாரும். நீ என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா? உன் முழு இருதயத்தோடும்? உனக்கு இரத்த சோகை. அது சரிதானே? இப்போது வீட்டிற்குச் சென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாயிரு. நாம் எல்லோரும், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லுவோம். (சபையார், ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம் “ என்று சொல்கின்றனர் - ஆசிரியர்.) ஸ்திரீயே, நான் அவருடைய தீர்க்கதரிசி என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? சரி, உன் வயிற்றுக் கோளாறு உன்னைவிட்டு நீங்கி விட்டது. இப்போது வீட்டிற்குச் சென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாயிரு . நாம் எல்லோரும், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லுவோம். (சபையார், ”தேவனுக்கு ஸ்தோத்திரம் “ என்று சொல்கின்றனர் - ஆசிரியர்.) சரி, ஐயா....?... இங்கே மேலே உள்ள நீங்கள். சரி. இப்போதே வீட்டிற்குச் சென்று நீர் வேண்டுமானால், உமக்குத் தோன்றுகிற எதை வேண்டுமானாலும் புசிக்கலாம். நீண்டகாலமாக உமக்கு வயிற்றுக்கோளாறு இருந்தது. அது சரியில்லையா? அது உண்மையென்றால், உம்முடைய கரங்களை உயர்த்தும். அது ஒரு குடற்புண். ஒரு....? அது அங்கேயே நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டது....... சரி. 82சரி, நீர் அந்த புற்று நோயை மேற்கொள்ள விரும்புகிறீரா? நீர் புற்றுநோயில்லாதவராக வாழ விரும்புகிறீரா? நீர் தேவனுக்கே சேவை செய்வேன் என்று வாக்கு கொடுப்பீரா? பரிசுத்த ஆவியைப் பெற்று, உம் வாழ்நாளெல்லாம் அவருக்காக ஜீவிப்பீரா? வீட்டிற்குச் செல்லும்; இயேசு கிறிஸ்து இரக்கமுள்ளவராயிருந்து உம்மை சுகமாக்குவாராக. பெண்மணியே, வாருங்கள். எங்கும் இருப்பவர்களே, உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? சரி, பெண்மணியே. ஒன்று உமக்கு ஸ்திரீகளுக்கு உள்ள கோளாறு இருக்கிறது. அதன்பிறகு உமக்கு ஒரு வயிற்றுக்கோளாறும் இருக்கிறது. அது உம்முடைய வயிற்றின் ஆழத்தில் உண்டாயிருக்கும் ஜீரண குடல் புண். அது சரியில்லையா? அது சரிதானே? நீ சுகமடைய விரும்புகிறாயா? நீ இப்போது சுகமடைகிறாய் என்று விசுவாசிக்கிறாயா? போ; நீ விரும்பின் பிரகாரமாகவே உனக்கு உண்டாவதாக. நாம் எல்லாரும் , “ தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ” என்று கூறுவோம். (கூட்டத்தினர், “தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ” என்று கூறுகின்றனர் - ஆசிரியர்) 83சரி, அந்த மனிதனைக் கொண்டு வாரும். நல்லது, ஐயா. இதைக்குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? விசுவாசிக்கிறீரா? நன்றி, ஐயா. இது ஏதோ எனக்கு கனத்தை உண்டாக்குகிறதற்கல்ல. அது அவருக்கு கனத்தை கொடுக்கிற காரியம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு . பிறகு நீர் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிப்பீர் என்றால், அப்போது தேவன் ஏதாவதொன்றை உமக்கு செய்ய முடியும். இவ்விதமாக என்னைப் பாரும். நீர் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசித்தால். சரி. நீ புற்று நோயால் அவதியுறுகிறாய். உண்மையில் நீர் அதை உணர்ந்திருக்கிறாய். அதாவது நீர் ஒரு வியாதியுள்ளவனென்றும், சீக்கிரத்தில் மரிக்கப் போகிற மனிதன் என்றும். இங்கே இன்னொரு காரியமும் இருக்கிறது. நீ பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள வாஞ்சிக்கிறாய். அது சரியா? அது சரியென்றால் உன் கையை உயர்த்து. போய் உன் சுகத்தையும், பரிசுத்த ஆவியையும், அவருடைய நாமத்தில்....?... பெற்றுக்கொள்? நாம் யாவரும், “தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக” என்று கூறுவோம். (கூட்டத்தினர் பதிலுரைக்கின்றனர் - ஆசிரியர்) அவர் இங்கே இருக்கிறார், ஜெபியுங்கள். விசுவாசியுங்கள். கட்டிகளோடு கூட அங்கே கடைசியில் அமர்ந்திருக்கும் அந்தப் பெரிய பெண்மணி, நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அந்த கட்டிகளை மேற்கொண்டு சுகமாக விரும்புகிறீர்களா? நீங்கள் சுகமாக விரும்ப மாட்டீர்களா? ஆம். நீங்கள் உங்கள் கையை உயர்த்தி, “இயேசுவே, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூற விரும்புகிறீர்களா? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. போய் சுகமாய் இருப்பீராக. 84சரி, ஐயா, வாரும், ஐயா. ஆமென். விசுவாசியுங்கள். தேவனில் விசுவாசம் வையுங்கள். ஐயா, நீர் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீரா? நீர் என்னுடைய வார்த்தையை சத்தியம் என்று ஏற்றுக்கொள்கிறீரா? சரி, ஐயா . நீர் சுகமானீர் என்றும் உம்முடைய கோளாறு என்ன அல்லது எது தவறாயிருக்கிறது என்றும் நான் உங்களுக்கு கூறுவேனாகில், பிறகு நீர் அதை ஏற்றுக்கொள்வீரா? சரி. உம்முடைய கையை உயர்த்தும். உம்முடைய காலால் மேலும் கீழும் நடந்து செல்லும். உம்முடைய கீல்வாதம், உம்முடைய மூட்டு வீக்கம் உம்மை விட்டுப் போய் விட்டது. நீர் வீட்டிற்குப் போய் சுகமாய் இருக்கலாம்..... அப்படியே வீட்டிற்குப் போய் சுகமாய் இருப்பீராக....... ஜனங்கள்...?... இந்தக் கட்டிடத்தில் இருக்கும் யாராயிருந்தாலும் நீங்கள் அந்த கர்த்தருடைய தூதனை விசுவாசிக்கும்படி கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். இங்கே இந்த வரிசையிலிருக்கும் நீங்கள், அங்கே ஏதோ வரிசையிலிருக்கும் நீங்கள் திரும்பி இந்தப் பக்கம் என்னைப் பாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரியாக அங்கே ஒரு ஸ்திரீ, சிவப்பு நிற உடையில் அமர்ந்திருக்கிறதை நான் காண்கிறேன். அங்கே ஏதோ ஒன்று, அவளுக்கு மேலாக அசைவதைக் காண்கிறேன் வெள்ளையான பொருள் ஒன்று, பார்ப்பதற்கு அது அவள் முதுகில் இருப்பதைப்போல் இருக்கிறது. ஸ்திரீயே, அது சரிதானே? உமக்கு முதுகு வலி தொல்லை இருக்கிறது இல்லையா? மேலும் உம்முடைய கண்களில் ஏதோவொரு தொல்லை இருக்கிறது இல்லையா? ஆம். நீ எக்ஸ்ரே சிகிச்சை எடுத்துக் கொண்டீர் இல்லையா? உம்மிடம் எக்ஸ்ரேக்கள் உள்ளன அல்லவா? அது சரிதானே? அது... அது சரியென்றால் உம்முடைய கையை உயர்த்தும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், இப்பொழுது எழுந்து காலூன்றி நின்று சுகமடைவாயாக. அல்லேலூயா. 85உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசியுங்கள். தேவன் அதை நிறைவேறச் செய்வாராக. தேவனிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள். சந்தேகம் கொள்ளாதீர்கள். விசுவாசியுங்கள். திருமதி.வுட், அங்கே அமர்ந்திருக்கிறார்கள், அது உங்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறதைக் காண்கிறேன். அது எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும்... உம்மை எனக்குத் தெரியும். ஆனால் உம்மிடத்தில் என்ன தொல்லை இருக்கிறது என்று எனக்குத் தெரியாது என்பது உமக்குத் தெரியும். ஆனால் இப்போது எனக்குத் தெரியும். உமக்கு ஒரு கட்டி ஒன்று..... வளருகிறது. உம்முடைய உணவுக்குழாய் பாதையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அது சரியா? சகோதரி.உட்? உம்மை எனக்குத் தெரியும். நல்லது, பிறகு ஏன் நீர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்முடைய சுகத்தை இப்போது ஏற்றுக்கொள்ளக் கூடாது? நீர் அதைச் செய்வீரா? அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியும். அது அங்கே தொங்கிக் கொண்டிருக்க நேர்ந்தது. சரி. அவளுக்கு அடுத்திருக்கும் அந்தப் பெண். சரி, பெண்மணியே. அவளுக்கு அடுத்து அமர்ந்திருக்கும் நீ என்ன நினைத்தாய்? நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நீ செய்வாயா? ஒரு நிமிடம் உன் காலூன்றி நில். நல்லது, உனக்கு மூத்திரப்பை கோளாறு உள்ளது. அது சரியா? அது சரியென்றால் உன் கையை உயர்த்து. இப்போது நீ வீட்டிற்குச் சென்று சுகமாய் இருக்கலாம். அவளுக்கு அடுத்து இருக்கும் அந்தப் பெண் அவளுக்கு கூட மூ40த்திரப்பை கோளாறு உள்ளது. அது சரியா? பெண்மணி, சரியாக அவளுக்கு அடுத்ததாக அமர்ந்திருக்கும் பெண்மணி? அது சரியென்றால் உன் காலூன்றி நின்று சுகமடைவாயாக. 86ஐயா, நீர் அதைக்குறித்து என்ன நினைக்கிறீர்? அது உண்மையென்று நீர் விசுவாசிக்கிறீரா? அந்த நீலநிற சட்டையும் சிவப்பு நிற கழுத்தணியும் அணிந்துள்ள நீ என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா? சரி. ஒரு நிமிடம் எழுந்து நில். அங்கே ஏராளமான ஜனங்கள் அசைந்து கொண்டிருக்கின்றனர். ஓ , ஆம். அது மலக்குடல் வாய் தொல்லை. அது சரிதானே ? - உயர்த்து- உன் கையை உயர்த்து. சரி. வீட்டிற்கு சென்று சுகமாய் இரு. அடுத்த பெண்மணியைக் குறித்தென்ன? நீ சுகமடைய விம்புகிறாயா? அதெல்லாம் உன்னைப் பொறுத்தது. உன் காலூன்றி நில், நீ என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசித்தால்? நீ என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா? நீ வயிற்று கோளாறால் அவதிப்படுகிறாய். அது சரியா ? உன் கையை உயர்த்து. அப்படியானால் நீ உன் வீட்டிற்குச் சென்று சுகமாய் இரு. என்ன விஷயம்? உங்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கும்படியாக இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். அங்கே சர்க்கரை வியாதியுடைய ஒருவர் படுத்துக் கிடக்கிறார். நீர் எழுந்து நிற்க விரும்புகிறீரா....?... அங்கே அந்த நீலம் அல்லது வெள்ளை நிற உடையுடன் இருக்கும் அவளும் கூட, எழுந்திருக்க ஆரம்பிக்கிறீர்கள். வீட்டிற்குப் போய் சுகமடையுங்கள். 87ஒரு நிமிடம். ஒரு வெள்ளைக்காரனுடைய கைகளை....... நான் காண்கிறேன், ஒரு சிறிய கறுப்பு நிற பெண்மணி இங்கே உட்கார்ந்திருக்கிறாள். பெண்மணியே, உன்னிடம் அட்டை இருக்கிறதா ? உன்னிடத்தில் எந்த ஜெப அட்டையும் இல்லை. ஜெப அட்டை உள்ள எவரும் எனக்கு வேண்டாம். உங்கள் காலூன்றி நில்லுங்கள். நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் என்னை விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு இருதயக் கோளாறு இருக்கிறது. இல்லையா? அது சரியா? உன் கையை உயர்த்து. சரி, வீட்டிற்குச் செல். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அதன் மேல் ஜெயத்தைப் பெற்றுக்கொள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அங்கே அவளுக்கு அடுத்து அமர்ந்திருக்கும், நீ என்ன நினைக்கிறாய்? உனக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. அது சரியா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உன் காலூன்றி நின்று சுகமடைவாயாக. உமக்குள்ள காரியம் என்ன? நீர் ஏன் உம்முடைய சுகத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது? நாம் நம்முடைய காலூன்றி எழுந்து நிற்போம், நீங்கள் ஒவ்வொருவரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்கள் சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கரங்களை மேலே உயர்த்தி, தேவனுக்கு மகிமை செலுத்துங்கள், நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் சுகமடைந்து விடுவீர்கள். உங்களுடைய நாற்காலிகளை விட்டு எழுந்து நில்லுங்கள்..... நாமத்தில், இங்கேயுள்ள சக்கரநாற்காலிகளை விட்டும் மற்றும் எல்லாவற்றை விட்டும் அவர்கள் எழுந்து நடந்து கொண்டிருக்கிறார்கள்.